முறிந்த எலும்பை சேர்க்க உதவும் பிரண்டை.. யார் யார் பிரண்டையை சாப்பிடலாம்? ஆச்சரியமான அற்புத மூலிகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பசியை தூண்டக்கூடிய பிரண்டையை பற்றி தெரியுமா? எலும்புகளை ஒட்டவைக்கும் பிரண்டையை பற்றி தெரியுமா? அற்புதமான இந்த மூலிகையின் நன்மைகள் என்னென்ன? பிரண்டையை யாரெல்லாம் தவிர்க்கலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
பிரண்டையில் துவையல் மட்டுமல்ல, பல்வேறு உணவுகளை செய்து சாப்பிடலாம். உடலை தேற்றக்கூடியது.. மந்தத்தை போக்கி பசியை தூண்டிவிடக்கூடியது இந்த பிரண்டை.. மூலம் இருப்பவர்கள் உடனடியாக சாப்பிட வேண்டிய மூலிகை இந்த பிரண்டைதான்.. அதிலும் ரத்த மூலம் வந்தவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது.

பூச்சிகள், ரணங்கள்
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றக்கூடியது.. எனவே, குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிட வேண்டிய மூலிகை இதுவாகும். நச்சுக்கள் நீங்கும்.. குடல் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும். அதாவது, கல்லீரல் சேதத்தை தடுத்து நிறுத்தி, குடற் புழுக்களை அகற்றும் தன்மை கொண்டது இந்த பிரண்டை.
கட்டாயம் சாப்பிடவேண்டியது பெண்கள்தான்.. ஏனென்றால், மாதவிடாய் கோளாறுகளுக்கு பிரண்டையை போல மருந்தில்லை.. இந்த பிரண்டையின் சாறு எடுத்து, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஒரு வார காலம் சாப்பிடுவதால், மாதவிடாய் கோளாறுகள் விலகும் என்பார்கள்..
சத்துக்கள் என்னென்ன
பிரண்டையில் வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு, ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் என ஏகப்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன.. எனவே, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் விலகுகின்றன.. எலும்புகளில் முறிவு ஏற்பட்டால, பிரண்டையை பயன்படுத்தலாம். உடைந்த எலும்பு, முறிந்த எலும்புகளை புதிய திசுக்களை உருவாக்கிய, ஒன்று சேர்த்துவிடும் தன்மை கொண்டது பிரண்டை.
எலும்புகள் சேரும்
அதேபோல பிரண்டையின் வேர்களையும் எலும்புகளை பலப்படுத்த பயன்படுத்தலாம்.. இந்த வேர்களை பவுடர் செய்து, சுடுநீரில் கலந்து பற்று போல போட்டாலும் முறிந்த எலும்பும் ஒன்றுகூடும்.. அல்லது இந்த பவுடரை பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம். இதனால், எலும்புகளின் அடர்த்தியையும் மீட்க முடியும்..
பிஞ்சு பிரண்டையை காயவைத்து பவுடர் செய்து, சுடுநீரில் கலந்து பற்று போட்டால், முதுகு வலி, கழுத்து வலியும் தீரும. ரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க பிரண்டை உதவுகிறது.. உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், பிரண்டை பயன்தரும்.. எனவே மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்களும், எலும்பு முறிவு பிரச்சனை உள்ளவர்களும்,மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று பிரண்டையை சாப்பிட்டு வரலாம்.
பிரண்டையை சாறு எடுத்து 6 டீஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் 7 நாட்களுககு சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.. வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வர உடல்நலம் அதிகரிக்கும்.
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல் செய்ய வேண்டுமானால், துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதில் 2 பச்சை மிளகாய், சிறிது புளி ஆகியவற்றை வைத்து, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கலர் மாறும் வரை வதக்கி கொள்ள வேண்டும். நன்றாக சிவந்து வறுபட்டவுடன் ஆற விட்டு, மிக்சியில் அரைத்துக் கொண்டால் போதும்.
தவிர்க்கலாமே
ஆனால், கர்ப்பிணிகளும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பிரண்டையை தவிர்க்கலாம்.. காரணம், இதிலிருக்கும் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடுமாம்.. அதேபோல பெண்கள், மாதவிடாய் நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், பிரண்டை சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதனால் ரத்தப்போக்கு அதிகமாகிவிடுமாம்.
More From
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications