தோசை மாவு மீந்து போயிடுச்சா? புளித்து போன இட்லி மாவில் இதை மட்டும் சேர்த்து பாருங்க.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: இட்லி, தோசை மாவு மீதமாகிவிட்டதா? புளித்து போய்விட்டதா? அதை எப்படி சத்தான உணவாக மாற்றலாம் தெரியுமா? இதோ 2 குட்டி டிப்ஸ்கள்.
ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என பல்வேறு வகைகள் இருந்தாலும், பலரும் விரும்புவது அரிசி இட்லியைதான், எனவே இட்லி, தோசைக்கு கருப்பு உளுந்து சேர்த்து மாவு அரைக்கும்போது, அதிக நன்மை கிடைக்கும்..

இட்லி, தோசை மாவு மீதமாகிவிட்டால், சிலர் அதனை கீழே கொட்டிவிடுவார்கள்.. ஓரளவு புளிப்பு நிறைந்த மாவாக இருந்தால், அதை ருசியான உணவாக மீண்டும் மாற்றலாம்.
மாவு: புளித்த மாவில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றிவிட்டு, நன்றாக கலந்து, அரை மணி நேரம் இதனை அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு பார்த்தால், மாவிற்கு மேல் பொங்கி நிற்கும் தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விட வேண்டும.. மீதமான மாவில் ரவா அல்லது அரிசி மாவு கலந்து தோசை சுட்டால் புளிப்பு தெரியாது.
ஆனால், எப்போதுமே தோசை சாஃப்ட் ஆக வரவேண்டுமானால். தோசை கல்லை தோசை வார்த்த பிறகு மூடி வைக்க கூடாது.. மிதமான புளிப்பு உள்ள மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. மிதமான சூட்டில், தோசை வார்க்க வேண்டும்.
வால்நட்: அதேபோல, புளித்த மாவில் தண்ணீர் ஊற்றி இறுத்தி எடுத்த பிறகு, பொடியாக நறுக்கிய வால்நட் 1 கப், 1 ஸ்பூன் இஞ்சி, பச்சைமிளகாய், கால் ஸ்பூன் மிளகு பொடி, உப்பு சேர்த்து கலந்து மாவில் கொட்டி தோசை வார்த்தால், சத்தான தோசை ரெடி.
அதேபோல, ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, வெண்ணெய், சர்க்கரை இந்த மூன்றையும் தண்ணீர் சேர்த்து விழுதுபோல கரைத்து, புளித்த மாவில் கொட்ட வேண்டும்.. இதில் தோசை வார்த்தால், ருசி அபாரமாக இருக்கும்.. புளிப்பும் நீங்கிவிடும்..
முறுக்கு: சிலர் தோசை மாவு மீதமாகிவிட்டால், இதில் முறுக்கு செய்வார்கள்.. இதற்கு ஒரு கப் பொட்டு கடலை, 2 ஸ்பூன் அரிசி, இரண்டையும பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் மீதமான தோசை மாவு 1 கப் சேர்த்து, அதில், பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, சீரகம், உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இட்லி மாவிலேயே தண்ணீர் இருக்கும் என்பதால், அனைத்தையும் முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்த்து பிசைத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதில் முறுக்கு சுட்டு எடுத்தால் அபார ருசியாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications