கொழுப்பு கரையணுமா? மினுமினு சருமம் வேணுமா? அப்ப இதை மட்டும் காலையில் 1 டம்ளர் குடிச்சு பாருங்க.. செம
சென்னை: உடல் வறட்சியை சரிசெய்யக்கூடிய தன்மை 1 டம்ளர் மோருக்கு உண்டு.. தினமும் மோர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிக்கலாம்.. மோரை ஃபிரஷ்ஷாக தயாரித்து அப்போதே குடிக்க வேண்டும். அதை நீண்ட நேரத்துக்கு வைத்து குடிக்க வேண்டாம்.

சத்தான நீர் மோர்: இஞ்சி, கருமிளகு, சீரகம் இவைகளுடன் சேர்த்து மோர் தயாரிக்க வேண்டும். இதனால் கூடுதல் நன்மை கிடைக்கும்.. மோரில் பயோ ஆக்டிவ் புரதங்களும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், உடலுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. வாய் மற்றும் தொண்டை ஆரோக்கியம் பேணப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா? வெறும் 245 மில்லி லிட்டர் மோரில், 8 மி.கி புரதமும், 98 கலோரிகளும், 22 சதவீதம் கால்சியமும், 22 சதவீதம் வைட்டமினும், B12-ம், 3 மி.கி நார்ச்சத்தும், 16 சதவீதம் சோடியமும் நிறைந்திருக்கின்றன. இதைத்தவிர, ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன.

புளிப்பு ஏப்பம்: காலை நேரத்தில், ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், உடலிலுள்ள உஷ்ண பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.. உடல் வறட்சியை தீர்க்கும்.. அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலும், புத்துணர்ச்சிகளும் கிடைக்கும். அஜீரண கோளாறுகள் நீங்கி செரிமானங்கள் சீராகும்.. புளிப்பான ஏப்பத்தை தடுக்கும். கொழுப்புக்கள் வெளியேற்றப்படும்.. வயிறு சுத்தமாகும்.. குடல் பாதுகாப்பு அதிகரிக்கும்..
ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை இந்த மோருக்கு உண்டு.. எனவே, இதயம் சீராக செயல்பட துணை புரியும்.. இஞ்சியும் சேர்ப்பதால், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் தடுக்கப்படும். வயிற்றிலுள்ள புண்கள் ஆறிவிடும்..
மோர் குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது. குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால், உடலின் எடையையும் குறைக்க மோர் உதவுகிறது. அதாவது ஒரு கிளாஸ் மோரில் 40 கலோரிகளுக்கும் குறைவாகவே இருக்கிறதாம்.

மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனைக்கு இந்த மோர் நிவாரணம் தருகிறது. வயிற்றுப்போக்கில் அவதிப்படுவோருக்கும் நிவாரணம் தரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கல்லீரல் மற்றும் அதனை சுற்றி தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டுகிறது.. கால்சியம் நிறைந்த மோர் என்பதால், எலும்புகள் பலமடையும். பற்களும் வலுவடையும்.
தேவையான அளவு புரதம் நிறைந்துள்ளதால், ஒரு டம்ளர் மோர் தினமும் குடித்துவிட வேண்டும். இதனால், தோல் ஆரோக்கியமும், தலைமுடி வளர்ச்சியும் பாதுகாக்கப்படும்.
தலைமுடி ஆரோக்கியம்: அதுமட்டுமல்ல, மோரில் வைட்டமின் C, B நிறைந்துள்ளதால், தலைமுடிக்கும் நல்லது, சருமத்துக்கும் நல்லது... புரோபயாடிக் லாக்டிக் அமிலம் மோரில் உள்ளதால், தலைமுடிக்கும், சருமத்துக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. தலைமுடியில் வறண்ட தன்மையையும், மோர் நீக்கிவிடும். அதுமட்டுமல்ல, மற்றும் முடிக்கு நீர் சத்தினை வழங்குகிறது மற்றும் இரண்டையுமே பிரகாசமாக வைக்கிறது.

ஆனால், வெறும் வயிற்றில் மோர் குடிக்கக்கூடாது.. இது வயிறு உபாதைகளை உண்டாக்கிவிடலாம்.. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கலாம்.. அதேசமயம், அதிக மோர் குடிக்கக்கூடாது.. ஒருநாளைக்கு 2 டம்ளர் குடிக்கலாம்.. குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் அதிகமாக குடித்துவிட கூடாது.
சோடியம்: காரணம், இதில் நிறைய சோடியம் உள்ளதால், உபாதைகள், ஒவ்வாமைகளை தந்துவிடக்கூடும். முக்கியமாக, சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள், மோர் அதிகம் குடிப்பதை தவிர்க்கலாம்.. அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும் மோர் குடிப்பதை தவிர்க்கலாம். ஏனென்றால், நீண்ட நாட்களுக்கு சோடியம் நிறைந்த உணவை சாப்பிடும்போது, அது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுமாம்.












Click it and Unblock the Notifications