Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்பருத்தி இலை.. நாலஞ்சு செம்பருத்தி பூவே போதும்.. நோயெல்லாம் நாலடி தள்ளி நிறுத்தும் "தங்க பஸ்பம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பருத்தி பூ, வேர், இலைகள் பல்வேறு பயன்களை கொண்டது என்றாலும், செம்பருத்தி சாறு தரும் நலன்கள் என்னென்ன தெரியுமா? செம்பருத்தியால் பக்கவிளைவுகள் வர வாய்ப்புள்ளதா?

செம்பருத்தி இலைகளை பொறுத்தவரை குளிர்ச்சி வாய்ந்தவை... உடம்பிலுள்ள உஷ்ண கோளாறுகளை தீர்க்க, நாலஞ்சு இலைகளே போதும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெறும் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

Amazing Health Uses of Hibiscus Flowers and do you know What are the Best health Tips of Super hibiscus leaves

குளிர்ச்சி இலைகள்: இதனால், உடலிலுள்ள சூடு வெளியேறும்.. உஷ்ணம் தணியும்.. சூடு கட்டிகள் ஆறும்.. வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் ஆறும். கண்களில் வடியும் நீர் நிற்கும்.. கண்வீக்கம், கண்களில் கட்டி, கண் எரிச்சல் நீங்கும்.. சிறுநீர் கடுப்பு விலகி சிறுநீர் தாராளமாக பிரியும். வெறும் சுடுநீரில் இலைகளை கொதிக்க வைத்து குடிப்பதற்கே இத்தனை நன்மைகள் கிடைக்கிறது.

இந்த இலையில் டீ தயாரித்து குடித்தால், ரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கும்.. முக்கியமாக, தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்க, இந்த டீ உதவுகிறது.. செம்பருத்தியில் வைட்டமின் C உள்ளதால், இருமல், ஜலதோஷம் போன்ற சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.

மாதவிடாய் கோளாறு: மாதவிடாய் நேரத்தில் இந்த டீ குடிக்கும்போது, மாதவிடாய் சீராகும், வயிற்று வலியும் குறையும்.. ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியும் சீராகும்.. மன அழுத்தம் விலகி மனம் அமைதி பெறும். புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகள் இந்த செம்பருத்தி இலைகளில் உள்ளன.. அதனால்தான், புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்.

ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள செம்பருத்தி இலைகள், முக சுருக்கத்தை போக்கக்கூடியது என்பதால்தான், அழகு சாதன பொருட்களில் மூலப்பொருளாக செம்பருத்தி இலைகளை சேர்க்கிறார்கள்.

செம்பருத்திகள்: செம்பருத்தி இலைகளை போலவே, செம்பருத்தி பூக்களையும் தலைக்கு அரைத்து தடவி குளித்து வந்தால், பேன், பொடுகு தொல்லைகள் ஒழியும்.. தலைமுடி அடர்த்தியாக, உறுதியாக, வளர்வதற்கு செம்பருத்தி பூக்கள் உதவுகின்றன.. செம்பருத்தி இலைகளை விழுதாக அரைத்து தலைக்கு பூசி குளித்தால், முடி சுத்தமாவதுடன், பளபளக்கும்.. தலைமுடிக்கும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பெஸ்ட் கண்டிஷனர் இது.

அத்துடன், மூளைக்கு தேவையான பலத்தை இந்த பூக்கள் தருகின்றன.. உடம்பில் சோம்பல், சோர்வு இருந்தால், இந்த செம்பருத்தி பூக்களே போதும்.. கஷாயம் போல அல்லது டீ தயாரித்து குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

கர்ப்பப்பை கோளாறுகளுக்கு இந்த இந்த பூக்கள் அருமருந்து என்றே சொல்லலாம். வெறும் வயிற்றில் 6 செம்பருத்தி இதழ்களை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

செம்பருத்தி பூக்கள்: இந்த பூவை காயவைத்து பவுடராக்கி, அதை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்திவிடும்.. தாது பலனை அதிகரிக்க செய்யும்.. முகமும், சருமமும் பொலிவு பெறும். அல்லது, செம்பருத்தி பூவை நிழலில் காயவைத்து, அதில், பன்னீர் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும் முகம் பளபளக்கும்.

ரத்தசோகை உள்ளவர்கள் செம்பருத்தி பூக்களில் டீ தயாரித்து குடித்து வரவேண்டும்.. இந்த செம்பருத்தி சாறுகள் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகின்றன.. குறிப்பாக, மெலனோமாவை தடுக்க உதவும் சிகிச்சையில் இந்த செம்பருத்தி சாறுகள்தான் பயன்படுத்துகிறார்களாம்..

டாக்டர்கள் ஆலோசனை: பொதுவாக எந்த மூலிகையை மருந்தாக சாப்பிடுவதாக இருந்தாலும், பக்கவிளைவுகள் இருக்கவே செய்யும். அதனால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே மருந்தாக உட்கொள்ள வேண்டும்.

செம்பருத்தி விதைகளால் செரிமானம் பிரச்சனை வரலாம்.. அதனால், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் செம்பருத்தி பயன்படுத்துவதற்கு முன்பு டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதேபோல, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்று செம்பருத்தி சாறு எடுத்து கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+