பாதாம் மட்டுமல்ல.. 'அந்த' விஷயத்துல பவர் வேணும்னா இதையும் எடுத்துக்கனுமாம்! மாஸ் காட்டும் ஆயுர்வேதம்
சென்னை: மாறிவரும் காலநிலை, உணவு பழக்க வழக்கங்கள், வேலை சூழல் ஆகியவை மனிதர்களின் உடல் நிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரதான மாற்றம் செக்ஸ்தான். செக்ஸில் ஆர்வமின்மை என்பது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சில தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையில் ஒரே ஒரு கடமை இருக்கிறது. அது இனப்பெருக்கம்தான். ஆனால் மனித சமூகம் சமீப காலங்களாக பாலியல் ஆர்வமின்மை எனும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவம் இதற்கு தீர்வு சொல்கிறது. இதற்காக பல மூலிகைகள் இருந்தாலும் அதில் முதலில் இருப்பது அஸ்வகந்தாதான். ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் பிரச்னையான விந்து தள்ளல், ஆண்மைக்குறைவு ஆகியவற்றிற்கு அஸ்வகந்தா மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.

இதனை வெதுவெதுப்பான பால், தேன் மற்றும் இஞ்சியுடன் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. பாலியல் ஆர்வமின்மைக்கு ஒரு முக்கியமான காரணியாக மன அழுத்தம், மனச்சோர்வு இருக்கிறது. இதிலிருந்து விடுவிக்க மருத்துவர்கள் ஆண்டிடிரஸன் எனும் மருந்தை பரிந்துரைக்கின்றன. அஸ்வகந்தாவில் இந்த ஆண்டிடிரஸன் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனவே அஸ்வகந்தாவில் செய்த சித்த மருந்து இனப்பெருக்க ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது.
ஆண்களுக்கு இப்படி எனில் பெண்களின் பாலியல் வறட்சியை போக்க ஷதாவரி எனும் தண்ணீர் விட்டான் கிழங்கின் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரணமான இடங்களில் வளராது. கடல் மட்டத்திலிருந்து 1,300 - 1,400 மீ உயரத்தில் உள்ள சமவெளியில்தான் இந்த செடி வளரும். இந்த மூலிகை கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இனப்பெருக்க உறுப்புக்களின் அளவை பெரியதாக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இது ஹார்மோன் சமநிலை மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

அதேபோல கருச்சிதைவு அபாயத்தையும் இந்த வேர் குறைக்கிறது. பெண்கள் மட்டுமல்லாது ஆண்களுக்கும் இந்த செடியின் வேர்கள் மிகுந்த பலனளிக்கின்றன. அதாவது ஆண்மை குறைவுக்கும், பிறப்புறுப்பு அழற்சியை குணப்படுத்தவும் இது உதவுவதாக சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அதேபோல இது பாலியல் விறைப்புத்தன்மையை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வரிசையில் அடுத்து உள்ள பொருள் ஷிலாஜித் . இது இமயமலை உள்ளிட்ட உயர்ந்த மலைகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த இயற்கை பிசினில் ஏராளமான தாது சத்துக்கள் இருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆண்மையை அதிகரிக்கவும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த ஷிலாஜித் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை உட்கொள்வதற்கு என சில வழிமுறைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செக்ஸ் உணர்வுக்கு அடிப்படையான டெஸ்டோஸ்டிரோனை இது அதிகரிப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் அடுத்துள்ள மூலிகை பொருள் பூனைக்காலி. இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரித்து மனிதர்களின் பாலுனர்வை இயல்பாகவே அதிகரிக்கும். இதேபோல சேஃப்ட் முஸ்லி எனும் தாவரமும் பாலுனர்வை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால் என்ன சிகிச்சை அளித்தாலும் அடிப்படை சரி செய்யப்பட்டால்தான் முழுமையான நிரந்தர தீர்வு அமையும் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அடிப்படை என்பது நாம் என்ன உண்கிறோம், எப்படியான சூழலில் வாழ்கிறோம் என்பதுதான்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications