Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழை வாழ வைக்கும்.. வாலையிலை அல்வா தெரியுமா? குளிர்ச்சி தரும் வாழைக்குளியல் முக்கியத்துவம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிர்ச்சி நிறைந்த வாழை இலைகளிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியும்? வாழையிலையை விழுதை வைத்து, என்னென்ன உணவுகளை சமைக்கலாம்? வாழையிலை குளியல் என்றால் என்ன? வாழ வைக்கும் வாழை தரும் நன்மைகள் என்னென்ன? சருமத்துக்கும், தலைமுடிக்கும் வாழையிலையை எப்படி பயன்படுத்தலாம்? அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.

வாழை இலையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.. பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு என ஏராளமான ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் A, C, K வைட்டமின்களும் அடங்கியிருக்கின்றன.

Banana leaf Vaazhai Kuliyal banana leaves

இதில், A, C, K போன்ற வைட்டமின், குடலிலுள்ள குடற்புண்கள் ஆறுகின்றன.. கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சக்தி வாழை இலைகளுக்கு உண்டு.

அதுமட்டுமல்ல, இந்த இலையிலுள்ள ஆல்வான்பியின் நச்சுக்கிருமிகளை ஒழிக்கும்.. இந்த இலையிலுள்ள பீனால், ரத்தம் உறைவதை தடுக்கக்கூடியது.. இந்த இலையிலுள்ள சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளையே அழிக்கக்கூடியது.. இத்தனை சத்துக்களும் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்ற முக்கிய பொருளுடன் கலந்திருக்கின்றன.

வாழையிலை சத்துக்கள்

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வாழையில், நீரில் கழுவி, அதில் நெய் தடவிவிட்டு, சூடான உணவுகளை இலையில் பரிமாறும்போது, அந்த சூட்டிலேயே இலைகள் லேசாக வெந்து, இலையிலுள்ள பச்சையத்தில் உள்ள பாலிபீனால் உணவில் ஒன்று கலந்து விடும்... இவைகளை நாம் சாப்பிடும்போது, ஆரோக்கியத்தை அதிகரித்து, ஆயுளும் அதிகரிக்கிறது. அதனால்தான், வாழையில் விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.

வாழை இலை உணவுகள்

வாழை இலையில் உணவு பரிமாறுவது ஒருபுறமென்றால், வாழை இலையையே உணவாக சாப்பிடுவதும் உண்டு.. எப்படி தெரியுமா? வாழையை வைத்து ரசம் வைப்பார்கள்... இதற்கு வாழை இலையை சுத்தமாக கழுவி, சிறுசிறு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.. இந்த வாழை இலைகளுடன் பூண்டு, மிளகு, சீரகம், தக்காளி போன்றவற்றை சேர்த்து விழுதுபோல அரைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதையும் கொட்டி மீண்டும் வதக்கிவிட வேண்டும். மசாலா சுருண்ட வதங்கியதுமே, புளிக்கரைசல் , உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கிவிட வேண்டும். ரசம் கொதித்து வரும்போது, கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம். இந்த ரசம் குடிக்கும்போது, காய்ச்சல், சளி, தலைபாரம், இருமல் என அனைத்து சுவாச கோளாறுகளும் நீங்கும்.

வாழை அல்வா, வாழையிலை ரசம்

அதேபோல வாழையிலை அல்வா செய்யலாம்.. இதற்கு இரண்டு வாழை இலையை கழுவி சிறுசிறு துண்டாக வெட்டி எடுக்க வேண்டும். இதனை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு எலுமிச்சை சாறு, நீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்க வேண்டும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, பூசணி விதைகளை தனி தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்...

அதே வாணலில் மேலும் நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதினை பச்சைவாடை நீங்கும்வரை வதக்கிவிட வேண்டும். பிறகு சிறிது சோள மாவு நீரில் கரைத்து, சுருண்டு வந்திருக்கும் விழுதில் கொட்டிவிட இறக்க வேண்டும். இதில், ஏலக்காய் தூள், சர்க்கரை, நெய் ஊற்றி கிளறிவிட வேண்டும். இறுதியாக வறுத்து வைத்திருக்கும், முந்திரிப்பருப்பு, பூசணி விதைகளை தூவி இறக்கினார் வாழையிலை அல்வா தயார்.

இதுபோலவே, இந்த வாழை இலையில் அல்வா செய்வார்கள்.. வாழை இலையை விழுதாக அரைத்து, சாற்றினை மட்டும் தனியாக வடிக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலில், ரவையை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலில நெய்யில் முந்திரி பாதாம் பருப்பினை வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலில், வடிகட்டிய வாழைச்சாற்றினை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. பிறகு அதனையும் மெல்லிசான துணியில் வடிக்கட்டி கொள்ள வேண்டும். இந்த சாற்றினை மீண்டும் வாணலில் ஊற்றிக் கொதிக்க விட்டு, ரவையை கொட்டி கிளறலாம். இறுதியில், நாட்டு சர்க்கரை, முந்திரி சேர்த்து, நெய் விட்டு இறக்கினால் வாழையிலை கேசரி தயார்.

கேரளாவில் மீன் பொழிச்சது மிகவும் பிரபலமாகும்.. வாழையிலையில் அல்வா செய்வார்கள்.. இது பார்ப்பதற்கு பச்சை கலரில் இருக்கும். அதேபோல, வாழையிலையில் ரசம் வைக்கலாம்.. எப்படி தெரியுமா?

சருமத்துக்கு உதவும் வாழை

வாழையிலையை சருமத்துக்கும் அரைத்து பயன்படுத்தலாம். இதில், அலட்டாயின் என்கிற முக்கிய சத்து உள்ளது. எனவே, வாழையிலைச்சாற்றை சரும தொல்லைகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் சொறி, சிரங்குகள், தீப்புண், எரிச்சல், கட்டிகள் போன்ற உபாதைகள் நீங்கும். இதிலுள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் முகத்திலுள்ள சுருக்கத்தை போக்குகின்றன.. இந்த இலையை உடம்பில் அரைத்து பூசினால், வேனல் கட்டிகளும் உடைந்துவிடும்.
வாழைச்சாறுடன் பன்னீர் சேர்த்து, கற்றாழை ஜெல் அல்லது கெட்டித்தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், சருமம் பொலிவு பெறும்.. முக சுருக்கமும் தடைபடும். அல்லது வாழையிலைச்சாற்றை, அப்படியே ப்ரிட்ஜில் ஐஸ் கட்டியாகும்வரை வைத்துவிட்டால் போதும். இந்த கட்டிகளால் சருமத்தை தேய்த்து வரலாம். இதனால் சூரிய கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தை தடுக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும், வாழையிலை சாற்றினை நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்தக்கூடாது.

மூலிகை சிகிச்சைக்கு வாழை

வாழையிலை குளியல் மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகை சிகிச்சையாகும். இதற்கென தனி வழிமுறைகள் உள்ளன.. அதன்படியே குளியலை எடுத்து கொள்ள வேண்டும். வாழை குளியலை மேற்கொண்டால், உடம்பிலுள்ள நச்சுக்கள், தொற்றுகள், கழிவுகள் நீங்கும்.. இதனால் உடல் எடையும் குறையும்.. கை, காலில் வீக்கம் இருந்தாலும் குணமாகிவிடும். வாழை இலை குளியல் நரம்புகளை பலப்படுத்தக் கூடியது. கிட்னியின் செயல்பாட்டை தூண்டிவிடும். உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தரும்.

இந்த சாற்றை தலைக்கும் பயன்படுத்தலாம்.. இதனால், அரிப்பு, பொடுகுகள், உஷ்ண கட்டிகள், எரிச்சல் போன்ற எதுவாக இருந்தாலும், வாழையிலைச் சாற்றை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவிடலாம். சருமத்துக்கு உதவுவது போலவே, தலைமுடிக்கும் இந்த வாழையிலை சாறு உதவுகிறது..

வாழைக்குளியல்

தலையில் அரிப்பு, பொடுகு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும், இந்த சாற்றினை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். வாழையிலை சாற்றின் அஸ்ட்ரிஜெண்ட் , அலன்டோயின் போன்ற முக்கிய பொருட்கள் கேசத்துக்கு சத்துக்களை, நிறத்தை கொடுக்கின்றன. எனவே, வாழைசசாற்றை மாஸ்க் போல போட்டும் குளிக்கலாம். இதனால் பொடுகு, இளநரை, அண்டாது.

இந்த வாழையிலை குளியல், குளிர்ச்சியை தரக்கூடியது. இயற்கை ஆன்டிபயாடிக் என்பதால், இதை சருமத்துக்கு, தலைக்கு தடவும்போது எந்த ஒவ்வாமையும் ஏற்பட வாய்ப்பில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+