தனிமையில் இருப்பதால் மரணம் கூட ஏற்படும்.. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஷாக் தகவல்!
வாஷிங்டன்: தனிமையில் இருப்பது ஒருவரின் மனநிலமையை கடுமையாக பாதிப்பதோடு, அது உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இதனால் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகளும் இருப்பதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிவேகமாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் எதிர்கொள்ளும் பெரும் சவால் தனிமைதான். தனிமையில் இருப்பது ஒருவரின் மனநிலமையை கடுமையாக பாதிப்பதோடு, அது உடல் நலனுக்கும் தீங்கு விளைவிப்பது என்று பல்வேறு சுகாதார நிபுணர்களும் சொல்கிறார்கள். குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காமல் போவது உள்ளிட்டவை ஒருவரை தனிமையாக உணரவைக்கும்.

தனிமைதான் உலளாவிய பெரும் சுகாதார பிரச்சினை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், தனிமையாக உணர்வது ஒரு மனிதருக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை போன்ற மனநலப் பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன. உடல் நலம் சார்ந்து என்றால் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகள் காத்திருப்பதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்களை இந்த தனிமை பிரச்சினை பாதிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தனிமை சார்ந்த பிரச்சினையை கையாள்வது எப்படி என்பது குறித்தும் உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:-
சமூகத்தில் மிகவும் ஆக்டிவ் நபராக இருப்பதன் மூலம் புதியவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படும். பாசிட்டிவ் ஆக நினைக்க வேண்டும். அதோடு, புறக்கணிப்பட்டாலும் அதை பற்றி கவலை இன்றி பாசிட்டிவ் ஆன விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டு செல்ல வேண்டும். உங்களைப் போல எண்ணம் கொண்டவர்கள் இடத்தில் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நம்பும் நபரிடம் அதிகம் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட சில தகவல்களையும் கூறியுள்ளது. மேலும் தனிமை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, நாடு தழுவிய அளவில் உக்திகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் தனது உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications