செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது ஏன் நல்லது? தாமிரம் தரும் ஆரோக்கியம்! மலைக்க செய்யும் காப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய முன்னோர்கள் பிரதானமாக பயன்படுத்தி வந்த உலோகம் செம்பு ஆகும்.. செப்பு குடம், செப்பு பாத்திரம் இல்லாத வீடுகளே அன்று கிடையாது.. செம்பு எனப்படும் காப்பர் உலோகத்தை சமையலுக்கு பயன்படுத்துவது ஏன் தெரியுமா? செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவது ஏன் தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

செம்பு தாதுக்கள் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியவை.. குறிப்பாக இந்த காப்பர் சத்துக்கள், ரத்த விருத்திக்கு தேவையான தாது உப்பாகும்..

Copper Vessels copper container

இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புத்தன்மையும் கலந்திருக்கிறது.. எனவே தண்ணீர் சுத்திகரிப்புக்கு உகந்ததாக உள்ளது.. தாமிரம் பயன்படுத்தப்படும்போது, நீரில் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா, பூஞ்சைகள், நச்சுக்கள் அழிந்துவிடும்.

செம்பு பயன்பாடுகள்

எனவேதான் செம்பு பாத்திரத்தில், முன்தினம் இரவு தண்ணீரை பிடித்து வைத்துவிட்டு, மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்க சொல்கிறார்கள்..செம்பு தாதுவில் நீர் ஊற்றினால், அதில் செம்பு தாதுக்கள் மெதுவாக கலக்க நேரிடும். இதனை குடிக்கும்போது, அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய தூண்டுகிறது.. எலும்புகளும் உறுதியாகும்.

தைராய்டு சுரப்பிகள்

தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது: தைராய்டு சுரப்பிகள் சிறப்பாக இயங்க தாமிர பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது குடிக்கலாம்.. தைராய்டு பாதிப்பு உள்ளவர்களும் இந்த தண்ணீரை குடிப்பதால் ஆரோக்கியம் பெருகும்.. செம்பு நீர் ரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது.. ரத்த குழாய்களை விரிவடைய செய்து, இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

அதேபோல, செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிக்கும்போது ரத்தமும் சுத்தமாகும்.. எப்படியென்றால், நல்ல ரத்த அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது காப்பர்.. இதனால் ரத்தமும் சுத்தமாகி, ரத்த புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம்சார்ந்த நோய்களும் தடுக்கப்படும். முக்கியமாக, அனீமியாவை அண்டவிடாமல் காக்கிறது. எனவே ஹீமோகுளோபின் குறைபாடுள்ளவர்கள் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட செம்பு நீரை குடிப்பது அவசியமாகும்.

அழற்சி பண்புகள்

நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், உடல் தொற்றுக்கள், வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், புண்கள், அஜீரணம் மற்றும் தொற்றுகளையும் தடுக்கக்கூடியதாக உள்ளது.. சரும ஆரோக்கியத்தை காக்கிறது.. சரும சுருக்கத்தையும் தள்ளி போடுகிறது..

இந்த நீரை குடிப்பதால் செரிமானம் சீராகிறது.. உடலிலுள்ள கொழுப்பை உடைக்கக்கூடிய திறன் தாமிரத்துக்கு உள்ளதால், உடல் எடையும் குறைக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரை குடித்தால், தாய், சேய்க்கு மிகவும் நல்லது.. அதனால்தான், புதுமணத் தம்பதிகளுக்கு செம்பு பாத்திரங்களை சீர்வரிசையாக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. இதனால் பிறக்கும்குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்குமாம்

எனினும் அதிகப்படியான தாமிர நுகர்வை தவிர்க்க வேண்டும்.. தாமிரம் அதிகமாகிவிட்டால், குமட்டல், வாந்தி, வயிறு உபாதை கல்லீரல் பாதிப்பு வரக்கூடும். எனவே, 0.9 மி.கி அளவு தாமிரம் உட்கொள்வது போதுமானது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+