தலைமுடிக்கு சீயக்காய், அரப்பு தூள் தேய்ப்பதன் நன்மைகள் என்ன? சீயக்காய் அரைக்க என்னென்ன போடலாம்?
சென்னை: சீயக்காய், அரப்பு போட்டு குளிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் இந்த சீயக்காய் சுற்றுப்புறத்தை எத்தனை தூய்மையாக வைத்திருந்தது என்பதையும் பார்க்கலாம். அது போல் குளியலுக்கு சோப்புக்கு பதில் குளியல் பவுடரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: முன்னோர்கள்_சொன்ன_எக்கோசிஸ்டம் யாதென_அறிவீரா???

● சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்கவும். அந்த அரப்பு நீர் நிலையில் கலந்து மீன் தாவரங்களும் வாழும்,ஓர் தகவல் முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்...
● ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.
ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.
● துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
● சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.
● பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.
● ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .
● ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.
● அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
● இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சீயக்காயின் முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இது ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக விளங்குகிறது. அது போல் சீயக்காய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஷாம்பு போடுவதால் கூந்தல் வறண்டு போகாமல் மென்மையாத பார்த்துக் கொள்கிறது.
அது போல் சீயக்காய் பயன்படுத்தி தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லையை நீக்க உதவுகிறது. உச்சந்தலையில் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. சீயக்காய் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. இதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
சீயக்காய் கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பைத் தரும். மேலும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. சீயக்காய், வெந்தயம், கருவேப்பிலை, செம்பருத்தி பூ, இலை, கற்றாழை, பூந்திக் கொட்டை, ரோஜா இதழ்கள் உள்ளிட்டவை போட்டு அரைக்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications