சர்க்கரை நோயாளி.. பீட்ரூட் சாப்பிடலாமா? அப்ப கேரட்? சர்க்கரை வள்ளிக்கிழங்கு போலவே பெஸ்ட் உணவு இதான்
சென்னை: சர்க்கரை நோயாளிகள் கிழங்கு வகைகளை சாப்பிடலாமா? தேங்காய் சாப்பிடலாமா? இதன் அளவுகோள்கள் என்ன? இப்படி பல சந்தேகங்கள் நிலவுகின்றன.
நீரிழிவு நோயை எந்நேரமும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உணவுப்பழக்கத்தையும் நீரிழிவு நோயாளிகள் சரியாக கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இயல்பாகவே, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் இருக்கும்.. இதனை ஈடுகட்டவே சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கிறது.. ஆனால், எதை சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறிவிடுமே என்ற கலக்கமும் இருக்கிறது. வேர்க்கடலை, பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட் போன்றவைகளை சாப்பிடலாமா என்ற சந்தேகம் நிறையவே உள்ளது.
பீட்ரூட்: சர்க்கரை காய் என்றே இந்த பீட்ரூட்டை சொல்வார்கள்.. தித்திப்பு காய் என்றாலும், தீங்கு விளைவிக்காத இயற்கை சர்க்கரை இதில் நிறைந்துள்ளது.. முக்கியமாக, பீட்ரூட்டில் நிறைய நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிக அளவில் உள்ளதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும், உணவுக்கு முன்பு, பீட்ரூட் சாப்பிட்டால், கூடுதல் பலன்கள் கிடைக்குமாம்.
கேரட் கிழங்குகளில், A, B6, K1, K, போன்ற அரிய வைட்டமின்களும், பையோடின், பொட்டாசியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே, புற்றுநோய் போன்ற பயங்கர நோய்களை ஆரம்பத்திலேயே தடுத்து அழிக்கக்கூடிய தன்மை இந்த கேரட்டுக்கு உண்டு..
சிகிச்சைகள்: அனைத்து வகையான புற்றுநோய் செல்களை இந்த கேரட் அழித்துவிடுமாம். அதனால்தான், கீமோ தெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களை, இந்த கேரட் ஜூஸ் தொடர்ந்து குடிக்க பரிந்துரைக்கிறார்கள்.
இனிப்பு சுவை கொண்ட இந்த கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறது. ஆனால், கேரட்டை "அளவோடு" சாப்பிட வேண்டும்... கேரட்டில் க்ளைசைமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இதை சாப்பிட்டதும் உடனடியாக ரத்த சர்க்கரை ஏறாது. ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குவதோடு செரிமானத்திற்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள்: தேங்காயை பொறுத்தவரை, கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ் உட்பட நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகமுக்கியமாக தேவைப்படுவதே இந்த நார்ச்சத்தும், கார்போஹைட்டுகளும்தான். இந்த இரண்டுமே தேங்காய்களில் உள்ளதால் ரத்த சர்க்கரை அதிகரிப்பதும் தடுக்கப்படுகின்றன. அதனால், தேங்காயை பால் எடுத்து சாப்பிடாமல், தேங்காயுடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது, நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது.
தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையலை தவிர்த்துவிட்டு, வெறும் தேங்காய் சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டு, துருவிப்போடும் பொரியல்களை குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்..
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: பனங்கிழங்கு எப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதோ, அதுபோலவே, சர்க்கரை வள்ளிக்கிழங்கும் நல்லது.. இந்த கிழங்கில், தித்திப்பு சுவை தரும் மாவுப்பொருள் மட்டுமல்ல, வைட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
முக்கியமாக, இதிலுள்ள B-6 வைட்டமின், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது... நார்ச்சத்து நிறைந்தது.. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது.. பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இந்த கிழங்கில் இனிப்பு நிறைந்திருந்தாலும், அது இயற்கையானது.. எனவே, ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாக உள்ளது.
வேர்க்கடலையை பொறுத்தவரை, ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. மெக்னீசியம், இன்சுலினை சுரக்க செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தக்கூடியது இந்த வேர்க்கடலை. அதனால், பெண்கள், 25 கிராம் வேர்க்கடலையும், ஆண்கள் 38 கிராம் வேர்க்கடலையும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications