கண்ணை மூடிட்டு வெந்தயக்கீரை வாங்கிடுங்க.. சர்க்கரை நோயாளியின் பெஸ்ட் கீரை.. அத்தனையும் ஆச்சரிய நன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு அனைத்து கீரைகளுமே நல்லதுதான் என்றாலும், இதில் வெந்தயக்கீரை முதன்மையானதாக திகழ்கிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?

100 கிராம் அளவு வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4 சதவீதம் புரதச்சத்தும், 1.1 சதவீதம் நார்ச்சத்தும், 1.5 சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9 சதவீதம் கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. இதில், வைட்டமின் A, மற்றும் சுண்ணாம்புச்சத்து நிரம்பியிருப்பதால், உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கிறது.. உடல் சோர்வு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக்கீரையை தவறாமல் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

Can Diabetics take Fantastic Fenugreek Leaves and Venthaya Keerai is the Best Uses of Healthy Skin Hair Eyes Kidneys

வெந்தயக்கீரை: வெந்தயக்கீரையை விடாமல் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.. உடல் உஷ்ணம சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும், வெந்தயக் கீரை போக்குகிறது.

சரும பளபளப்புக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் வெந்தயக்கீரை தூண்டுகோலாகிறது..உடலை அழகாக வைத்துக் கொள்வதிலும், வனப்பையும், மினுமினுப்பையும் தக்க வைப்பதிலும், வெந்தயத்தின் பங்கு அதிகமானது.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் + சிறிது கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலை, வெந்தயக்கீரை இரண்டையும் உப்பு சேர்த்த தயிரில் கலந்து ஊற வைத்து, சாப்பிட வேண்டுமாம். இதை செய்யும்போது, சரும நோய்கள் அத்தனையும் நீங்கி தோலில் மினுமினுப்பு கூடும்.

சரும எரிச்சல்: அவ்வளவு ஏன்? தீக்காயங்களையும் இந்த ஜில் கீரைகள் ஆற்றிவிடும்.. பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு பற்று போல போட்டால் காயம் குணமாகும்.. இதனால் எரிச்சலும் தணியும்.. நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த கீரையை அரைத்து பற்று போல தடவலாம்.

சர்க்கரை நோயாளிகள், 40 நாட்களுக்கு இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, நீரிழிவு கட்டுக்குள் வரும்.. நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும், காச நோய் கோளாறு உள்ளவர்களுக்கும் மிகச்சிறந்த ஆப்ஷன் இந்த வெந்தயக்கீரை..வெந்தயக்கீரையை, வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டால், வயிறு சுத்தமாகும்.. குடல் புண்களும் ஆறிவிடும்..

வெண்ணெய்: உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கும் இந்த கீரை நல்லது.. வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கழுவி, வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால், வயிறு உப்பசம், பசியின்மை போன்ற வயிறு உபாதைகள் நீங்கும்.. வெந்தயக்கீரையை நெய்யுடன் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை விரைவில் ஆறும்.

இந்த கீரையை பயன்படுத்தும்போது, இதன் தண்டுகளையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும்.. இளசான வெந்தயக்கீரையின் தண்டை அரைத்து, மோருடன் கலந்தும் சாப்பிடலாம். இதனால், வயிறு பிரச்னைகள் தீரும்.

உடல் எடை: உடல் எடையை குறைப்போருக்கும் வெந்தயக்கீரை கை கொடுத்து உதவுகிறது.. குறைவான கலோரிகள் உள்ளதால், நார்ச்சத்து அதிகம் என்பதால், இந்த கீரையை வாரம் 2 முறையாவது பயன்படுத்தலாம்.. அனைத்தையும்விட முக்கியமாக, பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது வெந்தயக்கரை.

பாலூட்டும் தாய்மார்கள், இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது, பால் உற்பத்தி பெருகும்.. அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி சாப்பிட்டாலும் பால் சுரக்கும். பெண்களை வெகுவாக பாதிக்கக்கூடியது, ரத்தசோகை என்பதால், ஹீமோகுளோபின் தொந்தரவு உள்ளவர்கள் வெந்தயக்கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.

வெந்தயம்: உடல் சூடு அதிகமாகி, தலைமுடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள், தவறாமல் சாப்பிட வேண்டியது இந்த வெந்தயக்கீரையாகும். அல்லது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, விழுதாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் முடி உதிர்வது நின்றுவிடும்.. வெந்தயக்கீரையை பொறுத்தவரை, கீரைகள் மட்டுமல்லாமல் அதன் விதைகள், தண்டுகள் என அனைத்து பாகங்களும் மருந்தாக உபயோகமாகிறது..

குறிப்பாக இதன் விதைகளின் கருவில் காலக்டோமன் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும், முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், போன்ற வேதிப்பொருட்களும் நிறைந்துள்ளதே இதன் தனிச்சிறப்பாகும்.

சிறுநீர் பெருக்கம்: சிறுநீர் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கு இந்த விதைகள் பயன்படுகின்றன.. உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி, சிறுநீர் பெருக்கத்தை அதிகப்படுத்தும் தன்மை இந்த விதைகளுக்கு உண்டு. செரிமான பிரச்சனை இருந்தாலும் சீராகும்.

சர்க்கரை நோயை மட்டுமல்லாமல், ரத்தசோகை, மாதவிடாய் தொந்தரவு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயு கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், போன்றவற்றையும் இந்த வெந்தய விதைகள் குணமாக்குகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+