ஊறவெச்ச வெண்டைக்காய்.. பாகற்காய் ஜூஸில் பாதத்தை வைத்தால் சர்க்கரை நோய் குறையுமா? நம்பறதா வேணாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் அருமருந்து என்று அனைவரும் அறிந்ததுதான். ஆனால், நீரில் ஊறவைத்த பாகற்காய் நல்லதா? இதன்மூலம் ரத்த சர்க்கரை அளவு குறைகிறதா? நிபுணர்கள் சொல்வதென்ன?

பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் வெந்தயம், அல்லது வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள். காரணம், 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே உள்ளன. இதிலுள்ள போலிக் அமிலம், கர்ப்பிணிகள், கருவில் உள்ள குழந்தை உட்பட நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த உணவாகும்..

ladies finger sugar patients

வெண்டைக்காய்: வெண்டைக்காயை, இரவு தூங்கும்போது, தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலை அந்த நீரை குடிப்பது என்பது ஆயுதர்வேத முறையாகும்.. சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடித்து வந்தால், வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், கழிவுகளை முழுமையாக வெளியேற்றும்.. மலச்சிக்கல் பிரச்சனை தீரும்..

அதுமட்டுமல்ல, வெண்டைக்காயில் பாலிபினால்கள், குவெர்செடின் மற்றும் ப்ளோவனாய்டுகள் நிறைந்துள்ளன.. எனவே, இது உயர் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக சொல்கிறார்கள்.. எலிகளுக்கு தந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டதில், எலிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை அதிகரிப்பது தெரிய வந்துள்ளதாம். மேலும், வெண்டைக்காய் மாங்கனீசின் சிறந்த மூலமாகும். எடை குறைப்பு, இரத்த சர்க்கரையை நிர்வகித்தல் போன்ற விஷயங்களுக்கு உதவுகிறது.

இதுபோலவே, பாகற்காய் தண்ணீரில் பாதங்களை ஊறவைக்கும்போலு பல்வேறு நன்மைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.. அதாவது, நான்கைந்து பாகற்காய்களை எடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பக்கெட்டில் கொட்டி, அத்துடன் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதாவது, உங்கள் கணுக்கால் பாதம் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பாகற்காய் ஜூஸ்: இந்த பாகற்காய் ஜூஸ் + தண்ணீரில் அரை மணி நேரம் பாதங்களை ஊற வைத்து எடுத்துவிட வேண்டும். இதனால், சர்க்கரையின் அளவு குறைவதாக கூறுகிறார்கள்.

எனினும், இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது வெண்டைக்காய், பாகற்காய் இரண்டுமே சத்தான உணவாகும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவே கூடாத உணவாகும்..

அதேசமயம், வெண்டைக்காயை ஊறவைத்து குடிப்பதாலோ, அல்லது பாகற்காய் ஜூஸில் கால்களை நனைப்பதாலும், சர்க்கரை குறைந்துவிடும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை.. ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகாரப்பூர்வமான குறிப்புகள் இல்லை.. சித்த மருத்துவத்தில் ஆங்காங்கே இதுகுறித்த சிகிச்சை இருந்தாலும், அதற்கான ரிசல்ட் எப்படியிருக்கின்றன என்பதற்கான ஆதாரமும் இல்லை..

முறையான பரிசோதனை: அதேசமயம், இப்படியெல்லாம் செய்வதால், எந்தவிதமான கெடுதலும் பாதங்களுக்கும், உடலுக்கும் இல்லை.. எனினும், பாகற்காய், வெண்டைக்காயை மட்டுமே நம்பியிருக்காமல், ரத்தச் சர்க்கரை அளவை அடிக்கடி டெஸ்ட் செய்து கொள்வதுடன், மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+