சர்க்கரை நோயாளி சப்பாத்தியை இப்படி சாப்பிடலாம், சுகர் இறங்கும்.. நீரிழிவு பாதிப்பு குறைய பெஸ்ட் உணவு
சென்னை: சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடும் என்று கலக்கம் அடைவார்கள்.. அந்தவகையில் அரிசி சாப்பிடலாமா? சப்பாத்தி சாப்பிடலாமா? அரிசியைவிட சப்பாத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதா? சுருக்கமாக பார்ப்போம்.
அரிசியில் நார்ச்சத்து மிகவும் குறைவு.. எனவேதான் அரிசி உணவை சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவும் உயர்ந்துவிடுகிறது.. எனவே அரிசி வகைகளை, நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

அதற்காக எல்லாவிதமான அரிசியும் சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை... பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்ற முழு தானிய அரிசிகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
இதில், சிகப்பு அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடானது, கோதுமையின் சர்க்கரை உயர்தல் குறியீடு போலவே மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சிகப்பு அரிசியை தாராளமாக சாப்பிடலாம்.
குதிரைவாலி: அதேபோல, குதிரைவாலி அரிசியையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம்.. இதில் நார்ச்சத்துக்களும் அதிகம்.. 25 கிராம் குதிரைவாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறது. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த அரிசி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது.
பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்ற முழு தானிய அரிசிகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஆனால், வெள்ளை அரிசியில் நார்ச்சத்து மிகக் குறைவாக இருக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் அதைத் தவிர்க்க வேண்டும்.
அரிசி சோறு: அப்படியானால் வெறும் அரிசி சோறுக்கு பதில் சப்பாத்தியை சாப்பிடலாமா? 60 கிராம் அரிசியில் 80 கலோரிகள், 1 கிராம் புரதம், 18 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. கோதுமையில் செய்த ஒரு சின்ன ரொட்டியில், 71 கலோரிகள், 3 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது கார்போஹைட்ரேட் அளவை ஒப்பிடும்போது, அரிசியிலும், கோதுமையிலும் கிட்டத்தட்ட ஒரே அளவுகளே உள்ளன.
ஆனால், கோதுமையில் சோடியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் B1, B2 நியாசின், ஃபோலேட், நார்சத்து, புரதம் ஆகியவையும் அரிசியை விட அதிகம் இருக்கிறது. எனவேதான், அரிசியைவிட சப்பாத்தி, அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
கிளைசெமிக் குறியீடு: அதேசமயம், கோதுமையின் வகை, சப்பாத்தியை தயாரிக்கும் முறை போன்ற காரணிகளை பொறுத்து சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீடு மாறுபடுகிறது.. முழு கோதுமை மாவு கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தியால் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. அதேபோல, சப்பாத்தியை ரொட்டியாக தயாரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, தோசை போல வார்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மையாகும்..
அதற்காக சப்பாத்தி, தோசையை மட்டும் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் குறையாது.. சப்பாத்தியுடன் காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது அதைவிட நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை படிப்படியாக உயர்த்த உதவும்.. அத்துடன், குளுக்கோஸ் மெதுவாக வெளியேறி பசி குறையும்... ஆனால், அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உளுந்து மாவு: அதேபோல, கோதுமை மாவில், உளுந்து மாவை கலந்து ரொட்டி தயாரிக்கலாம். இது அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், சர்க்கரை அளவை அதிகரிக்கிறது... அதேபோல, கோதுமைக்கு பதிலாக பார்லி மாவிலும் ரொட்டி சுட்டு சாப்பிடலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications