மீனை இதனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. பாகற்காயை முள்ளங்கியோடு சாப்பிடலாமா? அடடா, இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரந்தோறும் மீன் உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. ஆனால், ஒவ்வொரு உணவுக்கும், ஒவ்வொரு சாப்பிடும் முறை உள்ளது. அந்தவகையில், சில உணவுகளை இணைத்து சாப்பிடுவது, உடலுக்கு கெடுதி என்பார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது மீன்கள்தான்.. மீனுடன் சேர்த்து என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? வேறு எந்தெந்த உணவுடன், எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது? அனைத்தையும் சுருக்கமாக பார்ப்போம்.

பால் பொருட்களுடன் மீன், கருவாடு சேர்த்து சாப்பிடக்கூடாது.. லாக்டிக் பொருட்கள், மீன்கள் இரண்டுமே செரிமானமாக நேரம் பிடிக்கும்.. அதனால்தான், ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்..

மீன், முட்டை புரோட்டீன் உணவுகள்

மீனும் முட்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலுமே புரோட்டீன்கள் நீறைய உள்ளதுடன், நார்ச்சத்து, இரும்புச்சத்தும் பெருகி காணப்படுகிறது. இரண்டுமே புரோட்டீன் நிறைந்த உணவு என்பதால், புரத ஒவ்வாமையை இவைகள் ஏற்படுத்திவிடுவதுடன், தோல் வெடிப்புகளையும் தந்துவிடும். எனவே, இந்த உணவை ஒன்றாக சாப்பிடும்போது செரிமானம் கெட்டு, சத்துக்களும் முழுமையாக நமக்கு கிடைக்காமல் போய்விடும்.

கீரைகளும் இப்படித்தான், செரிமானமாக நேரம் பிடிக்கும் என்பதால், மீனுடன் கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அப்படி இணைத்து சாப்பிடும்போது, மந்த நிலை ஏற்படலாம்..

தயிரும் கருவாடும் ஏன் இணைத்து சாப்பிடக்கூடாது

தயிரும் கருவாடும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதுபோல, தயிரும் மாம்பழமும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. முள்ளங்கியை மீனுடன் சாப்பிடக்கூடாது.. இறைச்சியுடன் வினிகரை சேர்த்து சமைக்கக்கூடாது.. அதேபோல, பாலுடன் வாழைப்பழத்தை கலந்து சாப்பிடக்கூடாது. இதனால் ஜீரண உறுப்புகளை மந்தமாக்கிவிடும்.. நல்லெண்ணெய்யில் இறைச்சியை சமைக்கக்கூடாது..

பீன்ஸுடன் பால், இறைச்சி, முட்டை, மீன், பழங்கள், சேர்த்து சாப்பிடக்கூடாது. அதேபோல, பால் பொருட்களுடன் உருளைக்கிழங்கு, பழங்களை தானியங்களுடன் கலந்து சாப்பிடக்கூடாது. பாலுடன் சாக்லேட்டை சேர்த்து சாப்பிடக்கூடாது.

பாகற்காய் முள்ளங்கி ஒன்றாக சாப்பிடலாமா

மீனை போலவே சமையலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது பாகற்காய்களுக்குதான்.. பாகற்காயும் மீனும் சேர்த்து சாப்பிடுவது சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.. அதேபோல, பாகற்காயுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணிவிடும்..

பாகற்காய், வெண்டைக்காய் இரண்டுமே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கியுடனும், பாகற்காயை சாப்பிடக்கூடாது. இனிப்பான மாம்பழத்தையும், கசப்பு பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் அது மோசமான பாதிப்பை உடலுக்கு ஏற்படுத்திவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+