குளிர் காலத்திலும் சில் தண்ணீரில் குளிப்பதுதான் நல்லது! ஆனா இவங்க மட்டும் பச்சை தண்ணீரை தொடவே கூடாது
சென்னை: காலை முதல் வெளியே சுற்றி வேலை செய்துவிட்டு, இரவு வீடு திரும்பும் போது பலருக்கும் ஒரு குளியல் போட வேண்டும் என்றே தோன்றும். பொதுவாகப் பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களும் கூட மழை மற்றும் குளிர் காலங்களில் சூடு தண்ணீருக்கு மாறுவார்கள். ஆனால், உண்மையில் குளிர்ந்த தண்ணீர் அல்லது சூடு தண்ணீர் இரண்டில் எது நல்லது.. எது உடலுக்கு அதிக நன்மை தரும் என்பதை நாம் பார்க்கலாம்.
இப்போது தமிழ்நாட்டில் மழை சீசன் ஆரம்பித்துவிட்டது. மாநிலம் முழுக்க அதிலும் குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு உட்பட வடதமிழக பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இதுபோல குளிர் பருவதத்தில் பொதுவாக நமது வாழ்க்கை முறையும் கூட சற்று மாறும். வீடு திரும்பியதும் எப்போதும் பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களும் கூட சூடு தண்ணீரில் குளிப்பார்கள். ஆனால், உண்மையில் இரண்டில் எது உடலுக்கு நல்லது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்..
உதவுகிறது: பொதுவாக 15 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பத்தில் இருக்கும் தண்ணீரில் குளிப்பது தான் குளிர்ந்த நீரில் குளிப்பதாகக் கருதப்படும். இது இளைஞர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது நம்மை ஆக்டிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. தொடர்ந்து பச்சைத் தண்ணீரில் குளித்து வந்தால் அது எடை இழப்பு, எனர்ஜி அதிகரிப்புக்கும் கூட உதவுவதாக மருத்துவர் திவ்யா கோபால் குறிப்பிடுகிறார்..
இது தொடர்பாக டாக்டர் சந்தோஷ் குமார் அகர்வால் மேலும் கூறுகையில், "குளிர்ந்த நீரில் குளிப்பது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் போது அது இதயத்தில் உள்ள தமனிகளையும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நமது ரத்த அழுத்தமும் கூட குறைகிறது" என்கிறார்.
ஏகப்பட்ட பலன்கள்: சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வீக்கம், தசை வலி ஆகியவற்றைக் குறைக்கவும் குளிர்ந்த நீரில் குளிப்பது உதவுவதாக மருத்துவர் ஜஸ்மீத் சிங் குறிப்பிடுகிறார். மேலும், குளிக்கும் போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால் அது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் என்றும் இது உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுவதாக மருத்துவர் ஜஸ்மீத் குறிப்பிடுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாகக் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது, நமது உடலின் வெப்பம் குறைகிறது. இதையடுத்து நமது உடல் தன்னை தானே மீண்டும் சூடாக்கிக் கொள்ள முயலும். அப்போது வெள்ளை ரத்த அணுக்கள் ரிலீசாகி, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, குளிர் காலமாக இருந்தாலும் சூடு தண்ணீரை விடக் குளிர்ந்த நீரில் குளிப்பதே நமக்கு நன்மைகளைத் தருகிறது.
இவர்கள் தொடவே கூடாது: அதேநேரம் வயதானவர்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், மூளை பக்கவாதம் அல்லது இதய பாதிப்பு உள்ளவர்கள் குளிர் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிர்க்கும் போது திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூட குளிர் காலங்களில் சற்று வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications