கறிவேப்பிலையில் மறைந்திருக்கும் எண்ணற்ற ஹெல்த் ரகசியம் பற்றி தெரியுமா?
கருவேப்பிலையில் உள்ள எண்ணற்ற பயன்களும், அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்கள்
சென்னை: கறிவேப்பிலை சமைப்பதற்கும், கூந்தலை பராமரிப்பதற்கும் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் மற்றும் யாரும் அறியாத சில ரகசியங்கள் அடங்கியுள்ளது. வேப்ப இலையின் வடிவத்தில் இருப்பதால், இதற்கு கருவேப்பிலை என்று அழைக்கப்படுவதுண்டு. சித்த வைத்தியத்தில் வேப்ப இலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கு கறிவேப்பிலை இலையில் ஏராளமான மருத்துவ குணங்களும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கருவேப்பிலையில் துவர்ப்பு தன்மை இருப்பதால், பல நோய்களுக்கு முதன்மை மருந்தாக பயன்படுகிறது. கருவேப்பிலை உணவில் சேர்த்துகொள்ளவதால் காது கிருமி, பித்த நீர், சளி, வியர்வை, உள்ளுறுப்புகளின் கழிவுநீர் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தியாகும்.

கருவேப்பிலையின் பயன்கள்
கருவேப்பிலை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க மிகவும் உதவுகிறது. எல்லா வித கீரையை காட்டிலும், கொழுப்பை கரைக்கும் மூலப்பொருள் இதில் மட்டுமே உள்ளது. அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால், கருவுற்றியிருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு இதற்கு பெரும் பங்கு உண்டு. தலையில் நீர் அளவை பாதுகாத்து தலை முடி உதிராமல் தடுக்கும். தோல்களில் தொற்று வராமல் காக்கும். கருவேப்பிலைக்கு நிகராக பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை தலை நரை முடி வராமல் தடுப்பதற்கும், முடி கருமையாக, நீளமாக வளரவும் இக்கீரையை சாப்பிடலாம்.

பயன்படுத்தும் முறை
நன்கு காயவைத்து செய்யப்படும் கருவேப்பிலை பொடி, கருவேப்பிலை சட்னி, கடலை பருப்பு துவையல், உளுந்து பருப்பு துவையல், செய்யும்போது பச்சையாக கருவேப்பிலை சேர்த்தால் பலன் அதிகம். எல்லாவிதமான சட்னி, தொக்குகள் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய் துவையல், கொத்தமல்லி துவையலுக்கு கருவேப்பிலை பச்சையாக சேர்த்து அரைக்கவேண்டும். அப்படி அரைத்தால் மருத்துவ குணம் மாறாமல் நல்ல பலன் கிடைக்கும். சில சட்னியில் மட்டும் வதக்காமல், அரைக்கும்போது சேர்த்தால் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும் (முழு பலன் கிடைக்கும்) மற்றபடி தாளித்து செய்யும் உணவுகளில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கணைச்சூடு, கண்நோய் குணமாக்கும்
கண்நோய், கணைச்சூடு குணமாக, 48 நாள் தொடர்ந்து கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மூன்றும் உணவில் சாப்பிட்டுவர எப்பேர்பட்ட சூடும் தணியும். இவை கிடைக்காத நேரத்தில் முருங்கை கீரை, அகத்தி கீரை, காசினிக்கீரை, ஏதேனும் ஒரு வகை கீரை சாப்பிட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். சொல்லப்பட்ட மாற்று கீரையில் கருவேப்பிலையில் உள்ள மருத்துவ குணம் உண்டு.

வெளிப்புற பூச்சாக பயன்படுத்தலாம்
கறிவேப்பிலையை பொடியாக செய்து, தேங்காய் எண்ணெயில் சேர்த்து, எண்ணெய் பச்சை நிறமாக மாறும் வரை, சூரிய ஒளியில் வைத்து, பின்னர் சருமத்திற்கு வெளிப்புற பூச்சாக இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம், இது தோல் நோய்த்தொற்றுகளைத் வராமல் தடுக்க உதவுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications