முருங்கை விதை.. தலைமுடி வளர இதுதான் பெஸ்ட் ஆயில்.. இந்த 2 பொருள் இருந்தாலே நீளமாக முடி வளர்ந்துடும்
சென்னை: தலைமுடி வளர்ச்சிக்கு இரும்புச்சத்து அவசியமாகிறது. அந்த வகையில், தலைமுடி உதிர்வை தடுக்ககூடிய 2 வகையான எண்ணெய்களைப் பற்றி பார்ப்போம்.
எப்போதுமே ஆண்களுக்கு HB என்று சொல்லப்படும் ஹீமோகுளோபின் அளவானது, 13 கிராம்/100 மில்லிக்கு கீழும், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/100 மில்லிக்கு கீழும் இருக்க வேண்டும்.

அந்தவகையில் முருங்கையில், மற்ற தாவர உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்புச்சத்துக்கள் உள்ளன. செயற்கையாக நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தைவிட, இயற்கையாகவே முருங்கை கீரையில் கிடைக்கும் இரும்பு சத்தை நம்முடைய உடல் எளிதில் கிரகித்து கொள்கிறது. முருங்கை கீரை போலவே,
முருங்கை விதை: முருங்கை விதைகளையும் சொல்லலாம்.. இதிலுள்ள இரும்பு சத்துக்கள், நம்முடைய தலை முடி வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.. கடைகளில் முருங்கை எண்ணெய் என்று தனியாக கிடைக்கிறது.
இதை நாமும் வீட்டில் தயாரிக்கலாம்.. முருங்கைக்காயில் உள்ள விதைகளை மட்டும் வெளியே எடுத்து, வாணலியில் கொட்டி வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த விதைகளை கொட்டி கொதிக்கவிட வேண்டும். அப்போது விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்போது, அடுப்பை குறைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் பிரிந்து வரவர, அவைகளை தனியாக சேமித்து வைத்து வேண்டும்.
பாதாம் எண்ணெய்: பிறகு இந்த எண்ணெய்யை பாத்திரத்திலேயே 3 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும்... இறுதியில் எண்ணெய் மட்டுமே அடியில் தங்கியிருக்கும். இந்த எண்ணெய்யையுடன், பாதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும். வெறும் முருங்கை எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சிக்கு கூடுதல் நன்மை தரும்.
கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவற்றை சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி பயன்படுத்தினாலும் தலைமுடி உதிர்வு நிற்கும்.. அதேபோல, ரோஸ்மேரி எண்ணெய், எள் எண்ணெய் இவைகளை தலைக்கு தேய்த்தாலும் தலைமுடி உதிராது..
தலைமுடி உதிர்வு: இதற்கு ஒரு வாணலில், வெந்தய விதைகள் 1 ஸ்பூன், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடி சேர்த்து வறுக்க வேண்டும்.. இவைகளின் நிறம் மாறியதுமே, ஆறவைத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இதில், ரோஸ்மேரி எண்ணெய் 1 ஸ்பூன், எள் எண்ணெய் 7 ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து, தலைமுடிக்கு மசாஜ் செய்ய வேண்டும். 1 மணி நேரம் கழித்து தலைமுடியை கழுவிவிடலாம். இதன்மூலமும் தலைமுடி உதிர்வது கட்டுக்குள் வரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications