"முருங்கை வேர்".. ஆச்சரியம் தரும் பிரம்ம விருட்ச வேர்கள்..பல கோளாறுகளை நீக்கும் அற்புத முருங்கை மரம்
சென்னை: முருங்கை மரத்தின் வேர்கள்கூட மருந்தாகின்றன.. இந்த வேர்களை, மருத்துவரின் உதவியுடன் முறையாக பயன்படுத்தினாலே பல கோளாறுகளை சரிசெய்யலாம்.
வாழைப்பழத்தை போல 3 மடங்கு பொட்டாசிய சத்தும், தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு புரோட்டீன் சத்தும் முருங்கை கீரையில் உள்ளது. எந்த கீரையிலும் இல்லாத அளவுக்கு 75 மடங்கு இரும்பு சத்து முருங்கையில் உள்ளது. அதனால்தான், இதை பிரம்ம விருட்சம் என்று சித்தர்கள் அன்றே சிலாகித்து சொல்லி உள்ளார்கள்.
இந்த முருங்கையின் வேர்கள்கூட, நமக்கு மருந்தாக பயன்படுகிறது. எப்படி தெரியுமா? முருங்கை வேரில், ஏகப்பட்ட வைட்டமின்கள், தாதுக்கள், பயோஆக்டிவ் கலவைகள், துத்தநாகம், இரும்பு போன்றவை நிறைந்துள்ளன..

ஏகப்பட்ட சத்துக்கள்: முருங்கை வேரை பொடி செய்து வைத்து கொண்டால் பல நன்மைகளை பெற்று தரும்.. அதேபோல, முருங்கை வேரில் கஷாயம் செய்து சாப்பிடலாம்.. அல்லது முருங்கை வேரை பொடி செய்து, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டியும் சாப்பிடுவார்கள். இந்த வேரின் சாறுடன், பால் சேர்த்து குடித்தால், உள்ளுறுப்புகளுக்கு பலத்தை பெற்று தரும்.. வயிற்றிலுள்ள பூச்சிகளையும் இந்த வேர் வெளியேற்றிவிடும்..
கஷாயம்: முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் 2 வேளை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சிகள் முற்றிலுமாக நீங்கும்... முருங்கை வேரை கஷாயம் போல செய்து, கஷாயமாக்கி கொப்புளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும். இந்த தண்ணீர் காய்ச்சலை தடுப்பதற்காக எடுத்துகொள்ளவும் செய்யலாம். கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களுக்கு இந்த முருங்கை வேர் நலன் தரக்கூடியது..
உடல் பலம்: ஜீரண கோளாறுகளை சரிசெய்வதில் முருங்கை வேர் பேருதவி புரிகிறது. இதனால் மலச்சிக்கலும் தீர்கிறது. உடல் பலவீனமாக இருப்பவர்கள், இந்த முருங்கை வேர் பவுடரை, மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த முருங்கை வேரை அனைவருமே பயன்படுத்தலாம்.. சிறிது வேர் எடுத்து, அதை சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தாலே, உடலில் பலம் கூடும்.. நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும்.. உடல்சோர்வும் நம்மை அண்டாது. இந்த முருங்கை வேரில் இருந்து, சாறு எடுத்து, அதை பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், காசநோயும் குணமாகும்....
ஆரோக்கியம்: நீரிழிவு நோயாளிகளக்கு இந்த முருங்கை வேர் நன்மை பயக்கிறது.. இந்த வேரிலுள்ள சில முக்கிய சேர்மங்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பதில் பங்காற்றுகிறதாம்.. இப்படி பல அற்புதங்களை செய்யும் இந்த முருங்கை வேரினை, மருத்துவரின் முறையான ஆலோசனையை மருந்தாக எடுத்து கொண்டால், ஆரோக்கியம் பெருகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications