மட்டன் குழம்பு பெஸ்ட்.. ஆட்டு நுரையீரல் போதும்.. அத்தனை நோயும் ஓடிரும்.. மட்டன் மண்ணீரலின் மகத்துவம்
சென்னை: மட்டனைவிட, ஆட்டின் மற்ற பாகங்களில்தான், நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறதாம். அதில் 2 வகையான ஆட்டின் பாங்களை பார்க்கலாம். ஒன்று மண்ணீரல், மற்றொன்று ஆட்டு நுரையீரல்.
இந்த மண்ணீரலை, சுவரொட்டி என்றும் சொல்வார்கள்.. இது பச்சையாக இருக்கும்போது சுவற்றில் ஒட்டிக்கொள்ளுமாம்.. அதனால்தான், சுவரொட்டி என்று பெயர் வந்ததாம்..

முடக்குவாதம்: முடக்குவாதம் உள்ளவர்களுக்கும், சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கும், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும், இந்த சுவரொட்டி கைகொடுத்து உதவுகிறது.. வாய்ப்புண், வயிற்றுப்புண்களையும் இந்த மண்ணீரல் போக்குகிறது. இந்த மண்ணீரலை உப்பு சேர்க்காமல் சூப் செய்து குடித்தால்தான் முழுப்பலன் கிடைக்குமாம்.
அமினோ அமிலங்கள், B12, இரும்பு சத்துக்கள் போன்றவை அடங்கியதுதான் மண்ணீரல்... 50 கிராம் மண்ணீரலில், நமக்கு ஒரு நாளைக்கு நமக்கு இரும்புச்சத்துக்கள் கிடைத்து விடுகிறதாம். எனவே, ரத்தசோகையால் அவதிப்படுபவர்கள், மாதம் 2 முறையாவது மண்ணீரலை சமைத்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்..
மண்ணீரல்: குறிப்பாக, பெண்களுக்கு இந்த மண்ணீரல் கைகொடுத்து உதவுகிறது. பெரும்பாலும் ஹீமோகுளோபின் பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.. அதேபோல மெனோபாஸ் நேரத்தில், நிறைய உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.. அதேபோல, மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால், அனீமிக் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு தருகிறது மண்ணீரல்.
அதுபோலவே, ஆட்டு நுரையீரல்கள் சத்துக்கள் நிறைந்தது.. நீரால் நிரம்பியிருக்கும் இந்த நுரையீரல்களில் கொலஸ்ட்ரால் அவ்வளவாக கிடையாது.. நம் உடலிலுள்ள உஷ்ணத்தை போக்கக்கூடியது இந்த நுரையீரல்கள்.. முக்கியமாக, இடுப்பு பகுதிக்கு அபரிமிதமான வலுவை தருகிறதாம்...
ஆட்டு கால்கள்: வழக்கமாக ஆட்டின் கால்களை சாப்பிட்டால் நம்முடைய கால்களுக்கு பலம் கிடைக்கும். ஆட்டின் நெஞ்செலும்பு சாப்பிட்டால், நம்முடைய நெஞ்செலும்புக்கும் சக்தி கிடைக்கிற. அதுபோலவே, ஆட்டின் நுரையீரல்கள் சாப்பிட்டால், நம்முடைய நுரையீரலுக்கும் பலத்தை தருகிறதாம். குறிப்பாக, மூச்சுத்திணறல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இந்த நுரையீரல்கள் அருமருந்தாகின்றன.
ஆனால், இந்த நுரையீரலை நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.. இந்த நுரையீரலின் குழாய் பகுதியை, வாஷ்பேசினில் குழாயில் பொருத்திவிட்டு, நுரையீரல் முழுக்க தண்ணீர் நிரப்ப வேண்டும்..
நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து உப்பி மேலே வரும்போது, நீரை கொட்டி, அழுக்குகளை வெளியே எடுக்க வேண்டும். இப்படி 5 முறையாவது கழுவ வேண்டும்.
நுரையீரல் : நுரையீரலின் மீது மெல்லிய சவ்வு போல உள்ளதை கையாலேயே உரித்து எடுத்துவிட்டால் போதும். இப்போது ஒரு வாணலில் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதில், இந்த நுரையீரல் துண்டுகளை கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டால் போதும். மிச்சமுள்ள அழுக்குகளும் வெளியே வந்துவிடும். இப்போது இந்த தண்ணீரை வடித்துவிட்டு, நுரையீரலை விருப்பம்போல சமைக்கலாம்.












Click it and Unblock the Notifications