இத்துனூண்டு கிராம்பு.. தினமும் 2 துண்டு போதும்.. வைரஸ் தொற்று முதல் சைனஸ் வரை தீர்க்கும் கிராம்புகள்
சென்னை: அசைவ உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது என்று நினைத்து கிராம்புவை பலரும் ஒதுக்கிவிடுகிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால், புற்றுநோய் செல்களையும் அழிக்கும் சக்தி, இந்த கிராம்புக்கு இருக்கிறதாம்.
அஜீரணத்தை போக்கக்கூடியது இந்த கிராம்புகள்.. ஜீரண கோளாறையும் சரிசெய்யக்கூடியதால்தான், மட்டன், சிக்கனில் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது..

சத்துக்கள்: கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் கிராம்பில் நிறைந்திருக்கின்றன.
ஆண்டிஆக்சிடென்ட் ஏராளமாக உள்ளதால், எந்தவிதமான புற்றுநோய்களையும் நம்மை அண்ட விடுவதில்லை கிராம்புகள்.. சுவாச பிரச்சனைகளை முழுமையாக தீர்க்கக்கூடியது.. ஆஸ்துமா தொந்தரவு இருந்தாலும், கிராம்புவை மருந்தாக பயன்படுத்தலாம்.
கல்லீரல்: வெறும் வயிற்றில் தினமும் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பலம் பெறுகிறது. கிராம்பிலுள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது. வயிறு புண்கள், வாய்ப்புண்கள் இருந்தாலும் அதை கிராம்பு போக்கிவிடும்.. கிராம்பை மென்று தின்னும்போது வாய் துர்நாற்றமும் நீங்கும். ஜலதோஷம், சளிக்கு நிவாரணம் கிடைக்கும்.
எனினும், காலை நேரத்தைவிட, இரவில் தூங்குவதற்கு முன்பு 2 கிராம்பு சாப்பிட்டுவிட்டு, சுடுநீர் குடித்துவிட்டு படுத்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.. மலச்சிக்கல் இருந்தாலும் தீர்ந்துவிடும்.. வாயு, உப்புசம் பிரச்சனையும் விலகிவிடும்.. இதனால், குடல் ஆரோக்கியம் பெறுகிறது. முகப்பருக்கள் வராமல் இருக்கும்..
பற்கள் வலி: பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது. ஏனென்றால், கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க செய்கிறது. அதனால்தான் பல்தொடர்பான சில சிகிச்சைகளுக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.. காது வலி என்றாலும்கூட, இந்த 2 கிராம்பு மென்று விழுங்குவதே போதும்.
வெறுமனே கிராம்பு மென்று சாப்பிடும்போது, லேசாக சுவைத்து மெல்ல மெல்ல அதன் சாற்றை மட்டும் விழுங்க வேண்டும்.. அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம்.. இதனால், கை, கால் நரம்புகள் இழுப்பது போன்ற பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கிராம்பு ஒரு வரப்பிரசாதமாகும்.
மன அழுத்தம்: மன அழுத்தத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்துக்கு வழிவிடுகிறது.. கிராம்பு சாப்பிடுவதால் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. எடையையும் எளிதாக குறைத்துவிடலாம்..
நீரிழிவு நோயாளிகள், தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காரணம், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலையை தக்கவைக்கிறது. இதனால், போதும்.. இன்சுலின் உற்பத்தியை பற்றி கவலையே பட தேவையில்லை.. கிராம்பு சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
தவிர்க்கலாம்: ஆனால் கிராம்பு அதிகமாக உட்கொள்ளகூடாது.. காரணம், இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால், வயிற்று பிரச்சினைகள், அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
இரைப்பை குடல் பிரச்சனைகள்
கிராம்பு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. அஜீரணம் போன்றவற்றிலிருந்து வாயுவை நீக்குவதற்கு இது உதவியாக இருக்கும். ஆனால் அதை அதிகமாக உட்கொள்ளும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் காரணமாக, உங்களுக்கு வயிற்றுப் பிரச்சினைகள், அஜீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு அல்லது எரியும் உணர்வு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.. அடிக்கடி ஒவ்வாமை எதிர்விளைவுகள் இருந்தாலும், அடிக்கடி கிராம்புகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications