முருங்கை ஈர்க்கு.. முருங்கைக்கீரையை பாருங்க.. இனி முருங்கை குச்சிகளை தூக்கி வீசிடாதீங்க.. இதை படிங்க
சென்னை: தேவையில்லை என்று தூக்கியெறியப்படும் முருங்கை குச்சிகளில் உள்ள நன்மைகள் தெரியுமா? அதன் மருத்துவ குணங்கள் தெரியும்? வாங்க பார்க்கலாம்.
முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

முருங்கை பட்டை: இதில் முருங்கை பட்டையானது, முழுக்க முழுக்க வைத்தியத்துக்கு பயன்படுத்தக்கூடியது.. இநத பட்டையை உலர்த்தி பொடி செய்து, தலைவலி, காய்ச்சலுக்கு, மூட்டுவலி போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள்.. நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கால்சியம்: முருங்கைமரத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் + சுண்ணாம்புச்சத்து + நார்ச்சத்து போன்றவை அனைத்துமே சேர்ந்து, மரத்திலிருந்து பசை போல வெளியே தள்ளும்.. அதற்குதான் பிசின் என்று பெயர்... வெளியே தள்ளிவிடுவதால், இதை வீணான பொருள் என்று நினைத்துவிடக்கூடாது. தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் இந்த பிசினில் உள்ளதாம்.
ஏராளமான சத்துக்களும், வேதிப்பொருள்களும், அமினோ அமிலங்களும், தாது உப்புகளும் இந்த பிசினில் அடங்கி உள்ளன.. இரும்புச்சத்து உட்பட கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் இப்படி பல சத்துகள் இதில் இருக்கின்றன. இந்த பிசினை பலவகைகளில், பலவித பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். இதுபோலவே மிக முக்கியமானதுதான், முருங்கை ஈர்க்குச்சி.
அதாவது, முருங்கைக்கீரையை சுத்தம் செய்யும்போது, அதிலுள்ள இளம்குச்சிகளைதான் ஈர்க்குச்சி என்பார்கள்.. இந்த குச்சிகளை தூக்கி போட்டுவிட்டு, கீரைகளை நாம் பயன்படுத்துவோம். ஆனால், கீரையைபோலவே, இந்த குச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளன என்பது பலரும் அறியாதது...
ஈர்க்குகளின் நன்மைகள்: முருங்கை ஈர்க்குகளில் அதிகளவு கால்சியம் உள்ளது.. இதனால் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.. அதேபோல, 40., 45 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனை ஏற்படும்..
அப்போது, மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இப்படி பல உபாதைகள் ஏற்படும்.. அவர்கள் இந்த முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. இளம் பெண்களும், இந்த ஈர்க்குச்சியை சமைத்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்.
முருங்கை குச்சி பலன்கள்: இந்த முருங்கை ஈர்க்குச்சியை பலவகைகளில் உணவில் சேர்க்கலாம்.. சிலர் இதை வைத்து ரசம் செய்வார்கள்.. அதாவது, இளம் குச்சிகளை நன்றாக சுத்தம் சுத்தம் கொண்டு, அதை இடித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் இந்த இடித்த ஈர்க்குச்சிகளை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்..
இப்போது, அடுப்பில் ஒரு வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பில்லை, பெருங்காயம் தாளித்து, பாத்திரத்தில் கலந்து வைத்துள்ளதை கொட்டி இறக்கினால் ஈர்க்குச்சி ரசம் தயார்.
முருங்கை குச்சி ரசம்: இந்த ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்.. து.பருப்பு வேக வைத்து, அந்த பருப்பு தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய், தக்காளி, வெங்காயம், முருங்கை குச்சிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில், பருப்பு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கிவிட வேண்டும். இப்போது ஆறியதும் அதை வடிகட்டிவிட்டு, எண்ணெய், கறிவேப்பில்லை தாளித்து கொட்டினால், முருங்கை ஈர்க்கு சூப் ரெடி
இந்த ஈர்க்குச்சியில் கசாயம் செய்து குடித்தால் பல தொந்தரவுகளை தீர்த்துவிடும்.. ஈர்க்குச்சியை சுத்தம் செய்து எடுத்து கொள்வது போலவே, வேப்பிலை ஈர்க்கு , நெல்லி ஈர்க்கு , கறிவேப்பிலை ஈர்க்கு போன்றவற்றையும், சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஈர்க்குச்சி ரசம்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள், வசம்பு சேர்த்து, இந்த குச்சிகளை எல்லாம் அதில் கொட்டி நன்றாக கொதிக்கவிட வேண்டும். சுண்ட காய்ச்சியதும், அதை வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், ஏகப்பட்ட பிரச்சனைகள் தீரும். குறிப்பாக, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் நீங்கும்.. ஆக, வேண்டாம் என்று தூக்கி வீசப்படும் பொருளிலும், நன்மைகள் பல அடங்கியுள்ளன என்பதற்கு இந்த முருங்கை ஈர்க்குச்சியே உதாரணம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications