ஒல்லி ஒல்லியா நீங்க ஆகணுமா? பசலைக்கீரை + கறிவேப்பிலை..5 மேஜிக் இலை இருக்கே.. அதென்ன பச்சை ஜூஸ்.. அட
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இயற்கையான, ஆரோக்கியமான முறையிலேயே அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். பச்சை காய்கறிகளும், கீரைகளும் இதற்கு பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், உடல் எடை குறைப்புக்கு உதவும் 5 வகையான கீரைகளை பார்ப்போம்.
கறிவேப்பிலை: வெறும் வயிற்றில் நான்கைந்து கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டாலே, ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறதாம்.. இந்த கறிவேப்பிலை உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை அகற்றவும், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன்மூலம் எடை குறைப்பிற்கு இது உதவுகிறது.

உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்தி, கலோரிகளை எரிக்கவும், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் பெரிதும் துணைபுரிகிறது.. கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளதால், உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை வெகுவாக குறைத்துவிடுகிறது. அதனால் கறிவேப்பிலையை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் அது நன்மையைதான் கொடுக்கும்.
பார்ஸ்லி: உடல் எடை குறைப்பதில் பார்ஸ்லியின் பங்கு அபரிமிதமானது.. காரணம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை பார்ஸ்லி கரைத்துவிடும்.. உடலுக்கு தேவையான சத்துக்களையும் தரக்கூடியது.. குடல் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக விளங்கக்கூடியது.. அதனால் நச்சுப்பொருட்களும் வெளியேற்றிவிடும். சிலர் இந்த மல்லி கீரையை வைத்து டீ போட்டு குடிப்பார்கள்.. சிலர், ஜூஸ் தயாரித்து குடிப்பார்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் பார்ஸ்லியை கலந்து இறக்கிவிட வேண்டும்.. 20 நிமிடம் ஊற வைத்த பிறகு அதை வடிகட்டி குடித்தால் உடல் எடை குறையும். அல்லது, தினமும் பார்ஸ்லி கலந்த நீரை, நாள் முழுவதும் ஒரு லிட்டர் அளவுக்கு குடிக்கலாம்.. 1 லிட்டருக்கு மேல் குடிக்கக்கூடாது என்கிறார்கள்.
பார்ஸ்லி ஜூஸ்: இந்த பார்ஸ்லியில் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். அதாவது, ஒரு கைப்பிடி பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி, தண்ணீர், எலுமிச்சம் சாறு கலந்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதுவும் இடைவிடாமல் 5 நாட்கள் குடித்தால் ஓரளவு பலன் தரும்.. பிறகு 10 நாட்கள் மறுபடியும் இடைவெளி விட்டு, இந்த ஜூஸ் சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பது இந்த பார்ஸ்லிக்கும் பொருத்தம் என்பதால், குறைவான அளவே எடுத்து கொள்ளலாம்.
ஓமவல்லி இலை: உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில், ஓமவல்லிக்கு முக்கிய பங்கு உண்டு.. இந்த இலைகளை வைத்து ஜூஸ் போல செய்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
அதாவது, 8 ஓமவல்லி இலை, 8 புதினா இலைகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். இதில், நான்கைந்து ஸ்பூன் தயிர், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு கலந்து குடித்தாலே போதும் குடல் சுத்தமாகும்.. உடல் எடையிலும் மாற்றம் தெரிய துவங்கும்.
கொத்தமல்லி: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கைகொடுப்பது இந்த கொத்தமல்லி விதைகள்தான். காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை. கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்து கொண்டால், பல பிரச்சனைகைளை இந்த பொடி தீர்த்துவிடும்..
இந்த கொத்தமல்லி விதைகள் 20 எடுத்து, இரவு முழுக்க ஊறவைத்துவிட வேண்டும். காலையில் அந்த தண்ணீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதும்.. உடலிலுள்ள வாயுக்கள் நீங்கும். கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு.
பசலைக்கீரை: உடல் எடையை குறைக்கும் உணவு பொருட்களில் மிக முக்கியமானது இந்த கீரை.. மிக மிக குறைவான கலோரிகளே உள்ளதால், உடல் எடையைக் குறைக்க பெரிதும் துணை புரிகிறது.
அதாவது, 100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளதாம்.. இதைத்தவிர, B வைட்டமின்கள், மக்னீசியம் உள்ளதால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை உருக செய்கிறது.. இந்த கீரையிலுள்ள பொட்டாசியம், உடலில் நீரின் அளவை பராமரிக்க உதவும். ஒருவேளை இந்த கீரையை பச்சையாக சாப்பிட நினைப்பவர்கள், ஒரு நாளைக்கு 100 கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications