மாதவிடாய்.. அசோக மரப்பட்டை காட்டும் ஆச்சரியம்.. பெண்களின் வரப்பிரசாதம் அசோக மரம்.. மாமருந்து பூக்கள்
சென்னை: முருங்கை மரத்தின் பட்டை எப்படி பல நன்மைகளை தருகிறதோ அதுபோலவே, மருத்துவ குணங்களை கொண்டிருப்பதுதான், அசோக மரத்தின் பட்டைகளும்.
முருங்கை மரத்தை போலவே, இந்த மரத்தின் இலை, வேர், பட்டைகள் என அத்தனையும் மருந்தாகின்றன.. பொதுவாக, பெண்களுக்கு இந்த மரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம், கர்ப்பப்பை கோளாறுகளை தீர்ப்பதில், இந்த அசோக மரத்துக்கு பெரும்பங்கு உண்டு..

அசோக மரம்: அசோக மரத்தின் மூலிகைகள் ரத்த சுத்திகரிப்பு முதல் சரும பாதுகாப்பு வரை அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.. உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலும்கூட, இந்த மரத்தின் மூலிகையை கொண்டே, காயங்களை ஆற்றலாம்.
இந்த செடியின் பூக்களும், அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கை தடுக்க உதவுகின்றன.. அசோக மரத்தின் இலைகள், வயிற்றிலுள்ள புழு, பூச்சிகளை நீக்கி குடலை சுத்த செய்கின்றன..
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு, இந்த மரத்தின் பூக்கள் மிகவும் பலனை தருகின்றன.. பூக்கள், ஆரம்பத்தில் ஆரஞ்சு கலராக இருக்கும்.. பிறகு, சிவப்பு கலராகிவிடும்..
இந்த பூக்களை உலர்த்தி, நீரிழிவு நோய்க்கு சிகிச்சை தருகிறார்கள்.. அசோக மரத்தின் விதைகள், சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றுவதுடன், சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் காக்கிறது.. இந்த விதையை பொடித்து, பவுடர்களாகவே கடைகளில் விற்கிறார்கள்.. இது ஆஸ்துமாவை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். இந்த பூக்களை இடித்து, நீரில் கலந்து குடித்தால், ரத்தக்கசிவு, ரத்த மூலம் நின்றுவிடும்.
இலைச்சாறுகள்: இந்த இலைகள் உடல் சருமத்தை பாதுகாக்கின்றன.. இலைகள் நீளமாக கரும்பச்சை நிறத்தில் இருக்கும். வெறும் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், சிறிது கடுகு எண்ணெய்யும் சேர்த்து, கொப்புளங்கள், பருக்களில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இந்த இலையை இடித்து சாறு எடுத்து, சீரகத்தூள், மற்றும் தண்ணீருடன் கலந்து குடித்தால், வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வயிற்றுப்புண் போன்ற அனைத்துமே நீங்கும்.
மூலநோய்: இந்த மரத்தின் பட்டையை எடுத்துக் கொண்டால், மூலநோய்க்கு உதவுகின்றன.. இந்த மர பட்டைகளில் டீ போட்டு குடித்தாலும், மூலநோய்க்கு தீர்வு கிடைக்கும்..
மூட்டுவலிகளுக்கு, இந்த மரப்பட்டையை விழுதுபோல் அரைத்து தடவினால், தீர்வு கிடைக்கும். இந்த மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் என்ற பொருள் உள்ளதால், ஒழுங்கற்ற மாதவிடாய்களை சரிசெய்கிறது.. இதனால் வயிற்று வலியை நீக்குகிறது..
பிசிஓடி என்று சொல்லப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை குணப்படுத்துகிறது இந்த மரத்தின் பட்டைகள்.. இந்த மரப்பட்டை பொடி 5 கிராம் எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து, பாதியாக சுண்டவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலை, மாலை என, 2 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, "PCOD எனப்படும் நீர்க்கட்டிகள் சரியாகும்.. அதனால்தான், "பெண்களின் மருந்து" என்று இதை சொல்கிறார்கள்.
அலர்ஜிகள்: இந்த மரத்தின் பட்டையை, சிறிது நீரில் இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் பட்டையை விழுதுபோல் அரைத்து, சருமத்திற்கு பூசிவந்தால், சருமம் பளபளக்கும்.. அதனால்தான், காஸ்மெடிக்ஸ் எனப்படும் அழகு சாதன பொருட்களில், மூலப்பொருளாக இந்த மரத்தின் பட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.. இதனால், தோலில் உள்ள அலர்ஜிகள் நீங்கி, பொலிவுபெறும். ஆனால், கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications