வாழையிலையிலே.. இதென்ன ஆச்சரியம்.. வாழ வைக்கும் வாழையின் மகத்துவம்.. வாழையிலையில் கேசரி தெரியுமா?
சென்னை: வாழையிலையில் உணவு பரிமாறி சாப்பிடுவோம்.. ஆனால், வாழையிலையே, உணவாகி போவதுண்டு தெரியுமா? சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த வாழையிலையில் செய்யப்படும் சில உணவுவகைளை பார்ப்போம்.
வாழையை விதைத்தால் அவர்கள் குடும்பம் காலம் கடந்து வாழும் என்பார்கள்.. காரணம், வாழையில் தண்டு முதல் இலை வரை அத்தனையும் மருத்துவம்.. மகத்துவம்..!!

வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்துக்கள் உள்ளன.. இவைகள் கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. வைட்டமின் ஏ.சி, மற்றும் கே விட்டமின்கள் குடற்புண்களை ஆற்றும்.. இந்த இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்துள்ளன.
பச்சையம்: நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் உள்ள சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது. தலைமுடி கருப்பாக இருக்கும். வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், வாழையிலையில் பரிமாறி சமைப்பதுடன், இந்த வாழையிலையை வைத்தே சமையல் செய்வார்கள்.. மீன் பொழிச்சது இந்த வாழையிலையில் செய்யப்படும் கேரளாவில் மிகப்பிரபலமான உணவாகும். ஆனால், வாழையிலையில் அல்வாவும் செய்வார்கள்..
வாழை இலைகள்: 2 வாழை இலைகளை சுத்தப்படுத்தி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனை மிக்சியில் போட்டு சிறிதளவு எலுமிச்சம்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துகொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அதில் முந்திரி, பூசணி விதைகளை தனித்தனியாக சேர்த்து நன்றாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும்...
அதே வாணலியில் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வாழை இலை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்க வேண்டும். பிறகு, சோள மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ள வேண்டும். வாழை இலை விழுது நன்றாக வதங்கி கெட்டியானதும், அதில் சோள மாவு கரைசலை போட்டு கிளறவேண்டும்.
வாழையிலை அல்வா: அடுத்ததாக, ஏலக்காய் பொடி, சர்க்கரை, கலந்து, கொஞ்சம் கொசமாக நெய் ஊற்றிக் கிளறிவிட்டு, இறுதியில், வறுத்த முந்திரி, பூசணி விதைகளை தூவினால், வாழையிலை அல்வா ரெடி..
இந்த வாழையிலையில், சேகரியும் செய்யலாம்.. 2 வாழையிலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணிர் ஊற்றி மிக்சியில் போட்டு, பேஸ்ட் போல அரைத்து எடுதது கொள்ள வேண்டும்.. பிறகு அந்த சாறை மட்டும் தனியாக வடிக்கட்டி எடுக்க வேண்டும். ஒரு வாணலில், லேசாக ரவையை வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவேண்டும்.. முந்திரி பாதாம் பருப்புகளையும் சிறிது நெய்விட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
வாழை கேசரி: இப்போது இன்னொரு வாணலில், வடிகட்டிய வாழை சாறை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.. 2 நிமிடம் கொதித்துவரும்போது, அதை மறுபடியும் மெல்லிய துணியில் வடிக்கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாறை மறுபடியும் வாணலில் ஊற்றி, அது கொதித்தவுடன் ரவையை கொட்டி கிளற வேண்டும்.. பிறகு நாட்டுச்சர்க்கரை சேர்த்து, முந்திரி பருப்புகளை சேர்த்து, சிறிது நெய், விட்டு இறக்கினால் வாழை கேசரி ரெடி.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications