பிரிஞ்சி இலை.. டயாபெடிக் முதல் வெயிட் லாஸ் வரை தாங்கி பிடிக்கும் "பிரியாணி இலை".. அட்டகாச பட்டையிலை
சென்னை: பிரியாணி இலை என்று சொல்லக்கூடிய பிரிஞ்சி இலைகளில்தான் எத்துணை எத்துணை மருத்துவ குணங்கள் உள்ளன தெரியுமா? நீரிழிவு நோய் முதல் சுவாச பிரச்சனை வரை மொத்தத்தையும் தீர்க்கிறது இந்த இலைகள்.
வெறும் வாசனைக்கு மட்டுமே இந்த இலைகளை பயன்படுத்தி வருகிறோமே தவிர, முழு பயன்களை பலரும் அறிவதில்லை.. தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை, பிரிஞ்சி இலை என்றெலலாம் இந்த இலைக்கு பெயர் உண்டு..

பிரியாணி: இந்த பிரிஞ்சி இலைகளில் பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. இந்த சத்துக்கள் அனைத்துமே ஆரோக்கிய நலனுக்கு அடிப்படையாக இருப்பவை..
அஜீரணத்தை போக்கி, ஜீரண சக்தியை பெருக்கும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உள்ளது. இறைச்சி போன்ற அசைவ பொருட்கள் செரிமானம் ஆவதற்கு தாமதம் ஆகும் என்பதால்தான், இந்த இலைகளை தாளிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்..
கிருமிகள்: மணம்மிக்க இந்த இலைகள், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. இதனால், கிருமிகளை நம்மை அண்டவிடாமல் தாக்கும்.. கிருமி மட்டுமல்ல, பாம்புக்கடி விஷத்திலிருந்தும் இந்த இலைகள் நம்மை காக்கக்கூடியது.
தலையில் பொடுகு, அரிப்பு இருந்தாலும், இந்த சுடுநீரில், சிறிது எலுமிச்சம் சாறு, பிரியாணி இலை சேர்த்து கொதிக்க வைத்து, தலைக்கு தேய்த்து வந்தாலே, பலன் கிடைக்கும். தலைமுடி உதிர்வுக்கும் இந்த இலை உதவுகிறது.. இந்த இலையை கொதிக்க வைத்து, தலையை அலசி வந்தால், முடிஉதிர்வு கட்டுப்படும். உடம்பில் எரிச்சல் ஏற்பட்டாலும், அரிப்பு ஏற்பட்டாலும், இந்த பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து கழுவி வந்தால் போதும்.
சிறுநீரக செயல்பாடு: சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். இந்த இலையின் நறுமணமானது, டென்ஷன், பதற்றத்தை போக்கி மனதுக்கு அமைதி தரக்கூடியது.. நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த இந்த இலையில் டீ போட்டு குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊட்டி, ஒரு கைப்பிடி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் கலந்து குடித்தாலே போதும்.. அல்லது வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, இந்த இலைகளை தண்ணீருக்குள் போட்டுவைத்து, அதை குடித்து வந்தாலே போதும். கொழுப்பை கரைந்து, கழிவுகள் வெளியேறி, மெட்டபாலிசம் அதிகரித்து, எடை மெல்ல குறைய ஆரம்பிக்கும்.
நீரிழிவு நோயாளிகள்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதிலும் இந்த இலைக்கு பெரும்பங்கு உள்ளது. முக்கியமாக டைப்-2 நீரிழிவிற்கு இந்த இலைகள் நல்லது... இதயத்தின் செயல்பாடும் சீராக இருக்கும்..
வீட்டிற்குள் மளிகை, உணவுப்பொருட்கள், போன்ற இடங்களில் சிறுசிறு பூச்சிகள் வந்தாலும்கூட, 2 இலைகளை மளிகை டப்பாவுக்குள் போட்டுவிட்டால் போதும்.. எந்த பூச்சியும் அண்டாது..
இந்த பிரியாணி இலைகளை எரித்து, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால், சுவாச மண்டலமே சீர்படும்.. சுவாச உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.. சளி, இருமல், தும்மல், நீர்ப்பிடிப்பு, தலைபாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். அதனால், குளிர்காலம், பனி காலங்களில், இந்த புகையை நுகர்வது பெரும் பலனை தரும்.
ஆஸ்துமா: ஆனால், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால் இதை தவிர்த்துவிடலாம். டாக்டரின் ஆலோசனையை பெறாமல் இதை செய்யக்கூடாது.












Click it and Unblock the Notifications