கரிசலாங்கண்ணி.. வெறும் எண்ணெய்கள்.. இதை ட்ரை பண்ணுங்க.. தலைமுடி அடர்த்தியா வளரும்.. அருமை டிப்ஸ்
சென்னை: என்னதான் முயற்சி செய்தாலும், முடிஉதிர்வை தடுக்க முடியவில்லையா? தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? ரொம்ப ரொம்ப சிம்பிள்.. இந்த சத்துக்கள் நிறைந்த எண்ணெய்களை, ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க..!!
ஹார்மோன்கள் குறைபாடுகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள், ஹீமோகுளோபின் பிரச்சனைகள் இருந்தால், தலைமுடி கொட்டுவது அதிகரிக்கும்.. மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.
4 விஷயங்கள்: ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + நிறைவான உறக்கம் + போதுமான தண்ணீர் இவைகள்தான், தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. அதேசமயம், தலைமுடியையும் சரியாக பராமரிக்க வேண்டும். இதற்கு இயற்கையாகவே எண்ணெய்கள் நமக்கு கைகொடுக்கின்றன.

விளக்கெண்ணெய்: தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து, தலைக்கு மசாஜ் போல தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.. அதேபோல, சின்ன வெங்காயத்தின் சாறு எடுத்து, அதனுடன், தேங்காய் எண்ணெய்யும் கலந்து மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊற வைத்த குளித்து வந்தாலும் தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
தேங்காய் எண்ணெய்யுடன், கறிவேப்பிலை, செம்பருத்தி இலைகளை, ஆவாரம் பூ போன்றவற்றை அரைத்து காய்ச்சி எடுத்து வைத்து கொண்டால், இதுவும் தலைமுடி வளர்ச்சிக்கு பேருதவி புரிகிறது. அடர்த்தியும் அதிகமாகும்.
அதேபோல, பாதாம் எண்ணெய்யுடன் வேப்பிலை, வேப்பம்பூக்களை சேர்த்து காய்ச்சி தலைக்கு பயன்படுத்தினாலும் நன்மை தரும்.. இவை அனைத்துமே, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்தவையாகும்.
கறிவேப்பிலை: நெல்லிக்காய், 100 கிராம், கீழாநெல்லி இலை 100 கிராம், கறிவேப்பிலை - 100 கிராம், செம்பருத்தி பூ - 100 கிராம், வெந்தயம் - 25 கிராம், கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம் போன்றவற்றை, 2 லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் காய்ச்ச வேண்டும். பிறகு அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.
3 நாட்கள் கழித்து, இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து கொண்டு, பயன்படுத்தி வந்தால் போதும். கருகருன்னு தலைமுடி வளருவதுடன், முடியும் அடர்த்தியாக வளரும்.
கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இந்த இரண்டையும் அரைத்து உலர வைத்து, பிறகு, தேங்காய் எண்ணெயில் கலந்து, மிதமான சூட்டில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் மிகுந்த பலன் தரும்.. வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது போலவே, வெண்ணெய்யையும் தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.
வல்லாரை: இதைத்தவிர, ஆலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், வல்லாரை எண்ணெய், இப்படி ஏதாவது பயன்படுத்தலாம். ஆகமொத்தம், செயற்கை ஜெல்களை தூக்கி தூரப்போட்டுவிட்டு, இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை வைத்தே எண்ணெய் காய்ச்சி தலையை பராமரித்தாலே தலைமுடியின் ஆரோக்கியம் வாழ்நாளெல்லாம் பாதுகாக்கப்படும்!!












Click it and Unblock the Notifications