கறிவேப்பிலை.. அசத்துது வேப்பிலை.. நாலஞ்சு போதும்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?
சென்னை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, இலைகளின் பங்கு அவசியமாகிறது. அந்தவகையில், ஒருசில இலைகளை வெறும் வயிற்றில் பச்சையாகவே சாப்பிடுவதால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு சீராகிறது.. அதில் 2 வகையான இலைகளை பற்றி மட்டும் பார்ப்போம்.,!!!!
இந்த கறிவேப்பிலைகளை, எந்த வடிவில் உணவாக எடுத்து கொண்டாலும் அது நன்மையே தரக்கூடியது.. காய்ந்து போன கறிவேப்பிலையாக இருந்தாலும் சரி, அல்லது பச்சை கறிவேப்பிலையாக இருந்தாலும், ஒருபோதும் இதன் தன்மைகளும், சத்துக்களும் மாறுவதில்லை..

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை தருவது வேறு இருக்க முடியாது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில், வாந்தி வரும்.. பசியின்மை, தலைசுற்றல் இருக்கும்.. செரிமான தொந்தரவும் நிறைய வரும்.. அப்போது, கறிவேப்பிலை பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் தொந்தரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
கறிவேப்பிலையை சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இந்த கறிவேப்பிலை உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..
ரத்த சிவப்பணுக்கள்: வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்..
சர்க்கரை நோயாளிகள் இந்த கறிவேப்பிலையை சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்... நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்.. இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.. தலைமுடி நன்றாக கருகருவென வளரும்..
அடுத்ததாக வேப்பிலையின் நன்மைகளை அளவிட முடியாதது.. ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால், ஆயுர்வேதத்தில் வேம்பு-க்கென்றே ஒரு பிரத்யேகமான இடம் இருக்கிறது.. வெறும் நாலஞ்சு இலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே பல பிரச்சனைகள் விலகுகின்றன.
சர்க்கரை நோய்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வேப்பிலைக்கு உள்ளது.. ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
வேப்பிலைச்சாறு, ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது.. கெட்ட கொழுப்பை அகற்ற கூடியது.. அதேபோல, வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து காலையில் விழுங்கினால், குடல்பூச்சிகள் வெளியேறும்.. உடலில் தேங்கிக்கிடக்கும் அலர்ஜியும் விலகும்.
அருமருந்து: சருமத்துக்கும், தலைமுடிக்கும் இந்த வேப்பிலை எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதைவிட அதிகமாகவே, உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேப்பிலைகள் அருமருந்தாகின்றன.
இந்த லிஸ்ட்டில் புதினாவையும் சேர்த்து கொள்ளலாம்.. வெறும் வயிற்றில் நாலஞ்சு புதினா இலைகளை மென்று விழுங்கும்போது, வாயில் தோன்றும் துர்நாற்றம் நீங்கும்.. பற்களில் படியும் கரைகள் அகலும்..

புதினா தண்ணீர்: இந்த இலையிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தின் இருக்கும் துளைகளை இறுக்கமாக்கவிடும்.. உடலின் ஈரபதத்தை தக்கவைத்து கொள்ள உதவும்.. முகப்பரு, சரும பிரச்சனை விலகுகிறது.. செரிமான என்சைம்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்பையும் எளிதாக்குகிறது.
அதேபோல, ஒரு கிளாஸ் தண்ணீரில், சில புதினா இலைகளை போட்டு வைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும்போது, நமக்கு கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகின்றன.












Click it and Unblock the Notifications