முருங்கைக்கீரை + முளைக்கீரை.. இது ரெண்டு மட்டுமே போதுமே.. மலச்சிக்கலை போக்கும் 10 ஈஸி டிப்ஸ் பாருங்க
சென்னை: மலச்சிக்கல் பலச்சிக்கல் என்பார்கள்.. தண்ணீரை குறைவாக குடிப்பதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை இது.. எனவே போதுமான தண்ணீரை குடித்து வருவதுடன், கீழ்க்காணும் சில டிப்ஸ்களையும் பின்பற்றினாலே தீர்வுகிடைத்துவிடும்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. சிலசமயம், பெருங்குடலில் உள்ள தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்வதால் மலம் இறுகி கெட்டியாகி சிக்கலை ஏற்படுத்திவிடும்.. அதேபோல, கொழுப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் உண்ணுவதாலும் இந்த பிரச்சனை வரலாம்.

அல்லது தண்ணீர் குறைவாகக் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்துவிடுவது, பச்சை காய்கறிகளையும், பழங்களையும், கீரைகளையும் ஒதுக்கிவிடுவது போன்றவைகளும் அடிப்படை காரணமாகும்.
காய்கறிகள்: எனினும், உணவு முறையால் ஏற்படும் இந்த சிக்கலை, உணவு முறையிலேயே எளிதாக சரி செய்யலாம். சிலவகை பழங்களையும், காய்களையும், கீரைகளையும் குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்த்து கொண்டாலே மலச்சிக்கல் தீர்ந்துவிடும்
அந்தவகையில் பழங்களில், பப்பாளி, கொய்யாப்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், ஆப்பிள், பிளம்ஸ், பலாப்பழம், போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இதனால், பெருங்குடலை சுத்தமாவதுடன், மலச்சிக்கலும் தீரும். ஆனால், இவைகைளை வெறும் பழங்களாக சாப்பிடாமல், சில முறைகளை கையாள சொல்கிறார்கள்.
அத்திப்பழம்: அதாவது, பேரீச்சம்பழத்தை இரவில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். அதேபோல, அத்திப்பழத்தை பொறுத்தவரை, ஒரு டம்ளர் பாலில், இந்த பழத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டுமாம். திராட்சையையும் இரவில் தண்ணீரில் ஊற வைத்து அதை நசுக்கி, அந்த சாற்றை குடிக்க வேண்டுமாம். வெறும் பழமாக சாப்பிடுவதைவிட, இப்படி சாப்பிட்டால் பலன் அதிகம்.
பச்சை ஆப்பிள்: அல்லது கிவி பழங்களை வைத்து ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. 2 பச்சை ஆப்பிள், 3 கிவி பழம், சிறிது லெமன் லெமன் ஜூஸ் மூன்றையும் மிக்சியில் அடித்து ஜூஸாக்கி குடித்தாலும், மலச்சிக்கலை விரட்டிவிடலாம்.
கீரைகளை பொறுத்தவரை, முளைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை இவைகளில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இந்த கீரைகளிலேயே அகத்திக்கீரை பெஸ்ட் என்றாலும், கசப்பு காரணமாக பலர் அதை பயன்படுத்துவதில்லை. எனவே, சஞ்சீவி மூலிகையான முருங்கைக்கீரையை பயன்படுத்தலாம்.
முருங்கைக்கீரையையும், முளைக்கீரையையும் ஒரு கைப்பிடி எடுத்து, சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ள வேண்டும். சின்னவெங்காயத்தையும் ஒரு கைப்பிடி அளவுக்கு உரித்து வைத்து கொள்ள வேண்டும்.
கீரை கடையல்: இப்போது ஒரு வாணலில் நெய் ஊற்றி, இந்த 3 பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, பிறகு கடைந்துவிட வேண்டும். இதனை காலை அல்லது மதியஉணவில் சேர்த்துகொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எளிதாக தீரும். வெறும் 3 நாளைக்கு தொடர்ந்து இந்த கீரை கடையலை சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
அதேபோல, கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொறித்த பெருங்காயம் போன்றவற்றை சம அளவு இடித்து, சூரணம் செய்து, சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். அல்லது முடக்கத்தான் இலையை சாறு எடுத்து, ரசம் போல வைத்து சாப்பிடலாம.
சிறுதானியங்கள்: காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற்ற துணைபுரிகிறது.. முளைகட்டிய தானியங்கள், கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை சேர்த்துகொள்ளும்போது, நார்ச்சத்துக்கள் கூடுகின்றன.
அல்லது ஒரு டீ ஸ்பூன் கருப்பட்டியை, சூடான நீரில் கலந்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும். அதேபோல, கடுக்காய் அல்லது திரிபலா சூரணங்களையும் பயன்படுத்தலாம். தினமும் காலை அல்லது இரவு தூங்கும்போது, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீ ஸ்பூன் அளவுக்கு இந்த சூரணத்தை குடித்து வந்தாலே போதும்.












Click it and Unblock the Notifications