ஒரே இலை போதும்.. எருக்கஞ்செடியின் ஆச்சரிய நன்மைகள்.. எருக்கன் இலைகள் இருந்தாலே ஆயுசு பெருகும்.. செம
சென்னை: ஒரு செடியின் இலை, பூ, காய், வேர் என அனைத்து பாகங்களுமே பயன்தரும் என்றால், அந்த செடி மருத்துவ குணங்கள் நிறைந்தது என்றே அர்த்தம்.. அப்படிப்பட்ட செடிகளில் ஒன்றுதான் எருக்கன் செடிகள்.
2 வகை எருக்கன் செடி உள்ளது.. இதில், வெள்ளை எருக்கன் என்பதில்தான் நிறைய மருத்துவ நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. வறண்ட மண்ணில் கொத்து கொத்தான பூக்களுடன் மலர்ந்து காய்த்து தொங்கும்.

செடிகள்: இந்த செடியின் எந்த பாகத்தை உடைத்தாலும், அதிலிருந்து சில துளிகள் பால் வெளியேவரும். காலில் முட்கள் குத்திவிட்டால், இந்த பால்தான், கிராமப்புற மக்களுக்கு மருந்தாகிறது.. பாலை தடவியதுமே, வலி குறைந்துவிடும்.. பிறகு, முள் குத்திய இடம் பழுத்துப்போய், முட்கள் வெளியே வந்துவிடும்.
இந்த செடியின் இலைகள், சுவாச கோளாறுகளை போக்கக்கூடியது.. செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி, ஆஸ்துமா கட்டுப்படும். குறிப்பாக, உடலில் கட்டிகள் ஏற்பட்டுவிட்டால், இந்த செட்டியின் இலைகளை நெருப்பில் வாட்டி கட்டினால், பழுத்து போய் கட்டிகள் உடைந்துவிடும். வீக்கமும் குறைந்துவிடும்.
இலைச்சாறு: இந்த இலையில் சாறு எடுத்து, சில துளிகளை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்துவிடும். குதிகாலில் வலி ஏற்பட்டால், செங்கல்லை சூடு செய்து, அதன்மீது இந்த பழுத்த இலையை, சூடு பொறுக்கும் அளவுக்கு குதிகாலை அந்த கல்லில் வைத்து எடுத்தால், வலி குறைந்துவிடும்.
படை, சொறி, சிரங்குகள் இருந்தால், இந்த எருக்கன் இலையின் சாறில், மஞ்சள் தூள் சேர்த்து, கடுகு எண்ணெய்யில் காய்ச்சி எடுத்து வைத்து கொண்டு, போன்றவற்றிற்கு தடவினால் விரைவில் குணமாகும்.
பாம்பு, எலி: எலி கடிக்குகூட இந்த இலையை மருந்தாக தருவார்கள். இந்த இலையின் சாற்றில், வசம்பு, பெருங்காயம், லவங்கம், பூண்டு சேர்த்து காய்ச்சி, 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காதில் வலி வந்தால் அல்லது சீழ் வடிந்தால், இதில் சிறு துளிகளை விட்டால் நிவாரணம் கிடைக்கும். இந்த செடியின் பட்டைகளை உலர்த்தி, யானைக்கால் வியாதிக்கு தருவார்கள்..
பாம்பு கடித்துவிட்டால், இந்த எருக்கம் பூக்களை முதலுதவியாக பயன்படுத்துவார்கள்.. இந்த பூக்களை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று விழுங்க செய்துவிட்டு, பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். அதுவரை விஷம் ஏறாமல் கட்டுப்படுத்தும் சக்தி இந்த பூக்களுக்கு உள்ளது.
எருக்கம்பூக்கள்: இந்த பூக்களுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து, அதனை வெயிலில் காயவைத்தால் சாம்பல் போல கிடைக்கும். இந்த சாம்பலில், பல் தேய்த்து வந்தால், பல்வலி நீங்கும்.. பல்கூச்சம் நீங்கி வாய் ஆரோக்கியம் காக்கப்படும். பலவித பலன்களை இந்த செடி தருகிறது என்றாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று மருந்தாக பயன்படுத்துவது, பாதுகாப்பானது.












Click it and Unblock the Notifications