முருங்கையிலையை விடுங்க.. கற்பக மூலிகைகளை பாருங்க.. ரத்தசோகை முதல் குழந்தை பேறு வரை.. அற்புத கீரைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகளில் எத்தனையோ வகைகள் உள்ளன.. ஆனால், ஒருசிலவற்றை மட்டுமே அன்றாட உணவில் பயன்படுத்துகிறோமே தவிர, மற்ற கீரைகளின் மகத்துவம் பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. அத்தகையவற்றில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஆண்மை குறைபாடுகள்: ஆண்மை குறைபாடுகளை நீக்குவதில் முருங்கைக்கீரைக்கு முதலிடம் உள்ளது என்பது பலரும் அறிந்ததுதான்.. ஆனால், கரிசலாங்கண்ணி கீரையும் இதற்கு உதவுகின்றன. இந்த கீரைரயை உணவில் சாப்பிட்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை தன்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

Do you know Excellent Benefits of Sukkan Keerai and what are the Super Medical herbs

பொன்னாவரை: அடுத்ததாக, பொன்னாவரை கீரையை சொல்லலாம்.. இந்த கீரை ஆவார வகையை சேர்ந்தது.. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில், இந்த கீரைக்கு பெரும்பங்கு உண்டு.. உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், குடல் புழுக்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றிவிடும் இந்த கீரை.. இதனால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கிறது. வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தாலே, ஊளைச்சதை குறைய துவங்கும்.

நொச்சி இலைகளின் பங்குகளும் அபாரமானவை.. இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.. உடல்வலி, தசைவலிகளுக்கு தீர்வு தருகிறது இந்த இலைகள்.. 2 கைப்பிடி நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் குளித்தாலே, உடல் அசதி நீங்கிவிடும்.

மூட்டுவலிகள்: ஒரு ஸ்பூன் நொச்சி இலைச்சாற்றில், 1 கிராம் மிளகுத்தூள், நெய் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டால், மூட்டுவலி முதல் இடுப்பு வலி வரை குணமாகும். உடலில் வீக்கங்கள், புண்கள் இருந்தால், இந்த இலைகளை அரைத்து பூசினால் பலன்கிடைக்கும்.

சுக்கான் கீரையும் அபரிமிதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.. இதை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என்றும் சொல்வார்கள். மலச்சிக்கலை போக்கி, குடல் ஆரோக்கியத்தை இந்த கீரை பேணுகிறது.. அஜீரண கோளாறை போக்குகிறது.. இதயம், ஈரல் நன்கு பலப்பட உதவுகிறது. நிறைய பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து, இந்த கீரையை சட்னி போல செய்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. விஷக்கடிக்கு மருந்தாக இந்த கீரையை பயன்படுத்துவார்கள்.

புளியங்கீரை: பொதுவாக கீரைகளை சாப்பிட்டாலே ரத்தவிருத்தி அதிகமாகும்.. ஆனால், புளியங்கீரையை உணவில் பயன்படுத்தி வந்தால், இதன் பலன் அதிகமாகும்.. அனிமீயா பிரச்சனையை தீர்ப்பதுடன், கண் சம்பந்தமான நோய்களையும் தடுத்து காக்கிறது. அதேபோல, வெள்ளை கரிசலைக்கீரையையும் ரத்த சோகை நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், கொடிபசலைக்கீரை இதற்கு தீர்வாகிறது.. அத்துடன், நீர் கடுப்பையும் இந்த கீரை குணப்படுத்துகிறது.

தூதுவளை: இதுபோலவே, மஞ்சள் காமாலை நோயை அடித்து விரட்டும் கீழா நெல்லி கீரை, நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும் வல்லாரை கீரை, தூதுவளை, பிரண்டை, போன்றவைகளை எல்லாம் தவிர்க்காமல் நாம் உணவில் சேர்த்து கொண்டால், பலன்கள் பலமடங்காக கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+