பூனை மீசை மூலிகை.. ரத்த சுத்திகரிப்பு, பிளட் பிரஷர் நீங்க.. இந்த ஒரு டீ போதுமே.. பலே பூனை மீசை செடி
சென்னை: சிறுநீரகத்தின் காவலன் என்று சொல்லக்கூடிய பூனை மீசை மூலிகையின் பிற நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்வதில், இந்த மூலிகையின் பங்கு என்ன? ரத்தம் அழுத்தம் சீராக இந்த பூனை மீசை மூலிகையை எப்படி பயன்படுத்தலாம்?
பெரும்பாலும் சிறுநீரக வியாதிகளுக்குதான் இந்த பூனை மீசை மூலிகை பயன்படுத்தப்படுகிறது.. உடலிலுள்ள தேவையில்லாத உப்புகள், கெட்ட நீரை வெளியேற்றுவதுடன், சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகை கரைத்து வெளியேற்றிவிடும்.. இதனால், உடல் எடையும் குறையும்.

மூலிகைகள்: இந்த மூலிகையுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, 2 வேளை உணவுக்குப்பிறகு சிறிதளவு சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு உட்பட அனைத்து சிறுநீரக கோளாறுகளும் நீங்கும்..
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, இந்த மூலிகை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.. பூனை மீசை மூலிகையின் சாற்றினை தினமும் 2 வேளை குடித்து வரும்போது, சர்க்கரை நோய் வெகுவாக குறையும். அல்லது இந்த இலையை கொதிக்க வைத்து கசாயம் போல குடித்தாலும், சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
சூப்பர் டீ: ஜப்பான், மலேசியா, சீனா, இந்தோனேசியாவில் இப்படித்தான் கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். சுடுநீரில் 2 ஸ்பூன் இந்த பூனைமீசை பவுடரை சேர்த்து 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு வடிகட்டி குடிப்பார்கள். ஆனால், டீ தயாரிப்பதுபோல இந்த பவுடரை சேர்த்து கொதிக்க வைக்க மாட்டார்கள்.
வெறுமனே சுடுநீரில் போட்டு குடிக்கும்போது, உடலிலுள்ள கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையுமாம். மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்கள், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பித்தப்பையில் கற்களால் அவதிப்படுவோரும் இந்த பூனை மீசை மூலிகை பவுடரை குடிக்கலாம்.
பூனை மீசை மூலிகை: இதுஒருபுறமிருந்தாலும், ரத்த அழுத்தம் பிரச்சனையை சரி செய்வதில், மிகப்பெரிய பங்கினை இந்த பூனை மீசை மூலிகை வகுக்கிறது.. எப்படி தெரியுமா?
ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைப்பதில் இந்த பூனை மீசை சிறப்பாக செயல்படுகிறது.. ரத்த சுத்திகரிப்பிலும் மிகப்பெரிய பங்கு இந்த மூலிகைக்கு உள்ளது.. ரத்த கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனை போன்றவைகளை தீர்க்க, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக இன்றுவரை பூனை மீசை மூலிகை சேர்க்கப்படுகிறது.
கெட்ட கொழுப்புகள்: மசாலா உணவுகள், மது, சிகரெட் காரணமாக, உடலில் நச்சுக்கள் கலந்து, அவை ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளாக சேர்ந்து விடுகின்றன.. இவை உடலின் ரத்த ஓட்டத்தில் அடைப்பையும் ஏற்படுத்தி, தடையை உண்டுபண்ணுகின்றன..
அந்தவகையில், ரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்க பூனை மீசை மூலிகை பயன்படுகிறது. பூனைமீசை சூரணம், மிளகு பொடி, இரண்டையும் தண்ணீரில் போட்டு, சுண்டக்காய்ச்சி தினமும் 2 வேளை குடித்து வரும்போது ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளும் கரைந்துவிடும்.
வயல்வெளிகள்: கிராமங்களிலும், வயல் வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இந்த மூலிகை வளர்ந்திருக்கும்.. பார்ப்பதற்கு பூனையின் மீசை போலவே இருப்பதால், அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது. துளசியின் குடும்பத்தை சேர்ந்த இந்த பூனைமீசை மூலிகையை சீரக துளசி என்று சொல்வார்கள்.. இந்த செடியின், இலை, மலர்கள், விதை, தண்டு, வேர் போன்ற எல்லா பாகங்களுமே மருத்துவ குணம் நிறைந்தவைதான்
இத்தனை நன்மைகளை பூனை மீசை மூலிகையை, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது சிறந்தது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications