கல்லீரல் பலம் பெற.. நார்ச்சத்து + நீர்ச்சத்துடன் தேங்காய் பூக்கள்... அதென்ன தேங்காய் முட்டை.. அருமை
சென்னை: வாழையை போல, முருங்கையை போல, தென்னை மரத்தின் அனைத்து பாகமும் நமக்கு பயன்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. உணவாகவும், எண்ணெய்யாகவும், மருந்தாகவும், அழகு சாதனப்பொருளாகவும் என பல வடிவங்களை இந்த தேங்காய் பெறுகிறது. அதில் தவிர்க்க முடியாதது தேங்காய் பூக்கள்.
கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், என பல சத்துக்கள் நிரம்பியதுதான் தேங்காய்.. இவையெல்லாமே ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்கள் ஆகும்..

தேங்காயிலுள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்துதான், ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன.. நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.. முதுமையை தள்ளி போட்டு, சரும ஆரோக்கியத்தை பேணிகாக்கிறது.. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் நீக்குகிறது.
இதய நண்பன்: தேங்காயிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை... இதனால், கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை என்பதால், கொலஸ்ட்ரால் தொந்தரவும் ஏற்படவும் வாய்ப்பில்லை.. தேங்காயிலுள்ள கொழுப்புகள், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த தேங்காய்..
சிவப்பணுக்கள்: தேங்காயைவிட தேங்காய்ப்பூவில் நிறைய சத்துக்கள் உள்ளதாம்.. தேங்காய்ப்பூவில் காப்பர், இரும்புச்சத்து, தாமிரம் போன்றவை அதிகம் உள்ளதால், ரத்தத்தின் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக கிடைக்க வழிகோலுகிறது. கர்ப்பமான பெண்களும், பாலூட்டும் பெண்களுக்கும், தேங்காய்பூக்களை சாப்பிடும்போது, பால் அதிகமாக சுரக்கும்.. கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளும் நீங்கும்..
சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.. பசியும், சோர்வும் அதிகமாக இருக்கும்.. இந்த பிரச்சனைக்கெல்லாம் தேங்காய் பூக்கள் மிகவும் சிறந்தது.. இதனால், கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
தேங்காய் பூக்கள்: இதைத்தவிர, தேங்காய் பூ சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. ஜீரண சக்தியும் அதிகமாகும். இதயத்தில் சேரும் கொழுப்புக்களை கரைய இந்த பூக்கள் உதவுகின்றன.. அதேபோல, தைராய்டு சுரப்பியும் சீராகிறது.. தேங்காய் பூ தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், புற்று நோய் வராமல் காக்கப்படுகிறது.. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், தேங்காய்பூக்களை அதிகம் சாப்பிடலாம்..
தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூக்களாக மாறுகின்றன.. இந்த பூக்களை நாமே வீட்டில் தயார் செய்யலாம்.. ஒரு சாக்குப்பையில் சிறிது மண் போட்டு, அதற்கு சிறிது தண்ணீரையும் ஊற்றி அதனுள்ளே தேங்காய்களை காற்று படாதவாறு வைக்க வேண்டும்.. 3 மாதங்களுக்கு அதை திறக்கவே கூடாது.. பிறகு, 2 துண்டாக பிரித்து பார்த்தால் தேங்காயின் உள்ளே முழுவதும் தேங்காய் பூக்கள் பூத்திருக்கும்.. இதை தேங்காய் முட்டை என்றும் சொல்வார்கள்.
குடல் ஆரோக்கியம்: நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அபரிமிதமாக இந்த பூக்களில்தான் உள்ளன.. நீர்ச்சத்துக்கள், உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது... நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.. இந்த தேங்காய்பூக்களை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்களே சேராது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications