மூங்கில் அரிசி.. இத்தனை நன்மையா? சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்.. இயற்கையின் அற்புதம் மூங்கிலரிசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்எடையை குறைப்பதில், மூங்கில் அரிசி பெரும்பங்கு வகிக்கிறது. அதேசமயம், வேறு, பல நன்மைகளையும் இந்த அரிசி தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது.

மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் இந்த அரிசியை, முலரி என்பார், முலயாரி என்றும் சொல்வார்கள்.. அதாவது, மூங்கில் விதைகள்தான், மூங்கிலரிசி எனப்படுகிறது.. பார்ப்பதற்கு பச்சை கலரில் இருக்கும்.. வாசனையாக இருக்கும்.. தித்திப்பாக இருக்கும்..

Do you know Health Benefits in the Bamboo Rice and Moongil Arisi is the Excellent food for Diabetics

தித்திப்பு அரிசி: கிட்டத்தட்ட கோதுமையின் ருசி போலவே இருக்கும்.. இந்த பச்சை கலர் விதையைதான், உலர்த்தி அரிசியாக பயன்படுத்துகிறார்கள். ஒரு மூங்கில் பூத்த விதை கிடைப்பதற்கு, 20 முதல் 120 வருஷமாகும். அதாவது, தன் வாழ்நாளை முடிக்கும்போது, தன்னுடைய இனத்தை பரப்புவதற்காக பூத்து, விதைகளை உருவாக்குமாம்.. அதனால்தான், இந்த அரிசிக்கு எப்போதுமே கிராக்கி உள்ளது.

காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்களின் மிக முக்கிய உணவாக இந்த மூங்கில் அரிசி உள்ளது.. அதுமட்டுமல்ல, குரங்கு, யானை, போன்ற விலங்குகளுக்கும் இந்த அரிசி ரொம்ப பிடிக்குமாம். முன்பெல்லாம், மன்னர் காலத்தில், படைவீரர்களுக்கு இந்த உணவுதான் முக்கியமாக தருவார்களாம்.

கொழுப்பு சத்து : கார்போஹைட்ரேட் + நார்ச்சத்து + புரதத்தின் சிறந்த மூலமாம் என்றால் அது இந்த அரிசிதான்.. ஊட்டச்சத்து மிக்கது.. கொஞ்சம்கூட கொழுப்பு இதில் இருக்காது.. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் இருக்கிறதாம். அதனால்தான், உடல் எடை குறைப்பவர்கள் இந்த அரிசியை பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில், இந்த மூங்கில் விதைகளை, பெண் எலிகளை தந்து ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது, ஏகப்பட்ட குட்டிகளை ஈன்றெடுத்துவிட்டனவாம் பெண் எலிகள்.. அந்தவகையில், கருவுறுதலை மேம்படுத்துவதற்கு இந்த அரிசி உதவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தவகையில், பெண்களின் கர்ப்பப்பைக்கு பலத்தை தருகிறது இந்த அரிசி.. அதேபோல, ஆண்களுக்கும், தாது விரித்தியடைய செய்கிறதாம்.

மாதவிடாய்: அதேபோல, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளையும் இந்த அரிசி சரிசெய்கிறது. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை மட்டுமல்லாமல், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை தடுத்து, நுரையீரலுக்கு பாதுகாப்பை தரக்கூடியது இந்த மூங்கில் அரிசி..

மூங்கில் அரிசியில் வைட்டமின் பி 6 அதிகம் உள்ளதால், பற்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. பற்களில் சிதைவு, பற்களில் துவாரங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பற்களுக்கு வலுவை தருவதில் மூங்கில் அரிசி துணை புரிகிறது.

நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் என பலரும் இந்த அரிசியை குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த மூங்கில் அரிசி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். உடலின் சர்க்கரை அளவை இந்த உணவு கட்டுக்குள் வைக்கிறதாம். எனவே மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த அரிசியை எடுத்து கொள்வது நல்லது.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+