பெருங்காயம்.. அருமையான "கடவுளின் அமிர்தம்".. மாதவிடாய் நேரத்துல அற்புதம் தரும் "விதை" என்ன தெரியுமா?
சென்னை: பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.. இதனால், அதிக உடல் சோர்வு ஏற்படும்.. எனவேதான், மாதவிடமாய் காலத்திற்கேற்ப சத்தான உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டியிருக்கிறது.
அந்தவகையில், உடல் சோர்வு நீங்கவும், ரத்த இழப்பை ஈடுசெய்யவும், பெண்களின் இடுப்பு எலும்புகளுக்கு வலு தரும்வகையில், புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்துக்கள் அவசியம் உடலுக்கு தேவைப்படுகின்றன.. அதனால், மாதவிடாய் துவங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே, பெண்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, முட்டை, பால், கேழ்வரகு, உளுந்து போன்ற உணவுப்பொருட்களை சாப்பிட துவங்க வேண்டும். ராகி களி, ராகி புட்டு, ராகி அடை செய்யலாம்.. உளுந்துவில் களி, கஞ்சி, வடை செய்யலாம்.. வயிற்றுவலியை ஏற்படுத்தும் புரோஸ்டாகிளான்டின்ளை (Prostagladings) கட்டுப்படுத்துவதில் ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்களுக்கு நிறையவே பங்கு உள்ளது.
பழங்கள்: அதனால், பச்சை காய்கறிகள், கீரைகள் பழங்கள், கொட்டைகளை சாப்பிட வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 100 கிராம் பழங்கள், காய்களையாவது சாப்பிட வேண்டும்.
சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால், மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் தசை பிடிப்புகளை போக்கலாம். கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்றவற்றை ஏதாவது ஒரு ரூபத்தில் சமைத்து சாப்பிடலாம்..
அதேபோல, மாதவிலக்கு காலத்தில், ஒவ்வொரு வேளையும் உணவின்போதும், ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொண்டால் நன்றாக செரிமானம் ஆகும்.. அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் அளவுகளை வெளியேற்ற செய்வதில் ஆளி விதைகளுக்கும் நிறைய பங்குண்டு. வாரம் 2 முறையாவது முருங்கைக்கீரையை சாப்பிட வேண்டும்.. அத்துடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
மீன் முட்டைகள்: மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து 14 நாட்கள் வரையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மனும், அடுத்த 14 நாட்களுக்கு புரோஸ்டாகிளான்டின்ஸ் ஹார்மோனும் முழுமையாக வேலை செய்வதற்கு, கொழுப்பு அமிலங்கள் தேவைப்படுகின்றன.. அவைகள் சோளம், சோயாபீன்ஸ், வால்நட், மீன், முட்டைகளில் அதிகம் காணப்படுகின்றன.
மாதவிடாய் நோட்களில், உதிரப்போக்கு காரணமாக, உடலில் கிருமிகள் சேரலாம்.. எனவே, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து சமைப்பதால், உடலுறுப்புகளிலுள்ள நச்சுக்கள் வெளியேறும்.. ரத்தமும் சுத்தமாகும்.. உடல் சோர்வும் நீங்கும்

வெந்தயம்: மாதவிடாய் காலத்தில், தவிர்க்கவே முடியாதது வெந்தயம் ஆகும்.. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்டாகிளான்டின்ஸ்களை கட்டுக்குள் வைத்து, வயிற்று வலியையும் போக்குவது இந்த வெந்தயம்தான்.. அதனால், ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிது வெந்தயத்தை ஊறவைத்து, அந்த தண்ணீருடன் சேர்த்து குடித்தாலே, ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும்.
பெருங்காயத்தையும் தவிர்க்கக்கூடாது.. இதில், புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதால், பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்யும் அருமருந்தாகிறது இந்த பெருங்காயம்.. மாதவிடாய் சரியாக வராத பிரச்சனைக்கும், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனைக்கும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும், இந்த பெருங்காயம் பேருதவி புரிகிறது.. அதனால்தான், இதை கடவுளின் அமிர்தம் என்கிறார்கள்..
கடவுளின் அமிர்தம்: பெண்களுக்கு இது சிறந்த மருந்தாக இருந்தாலும், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது என்பார்கள்.. ஒருவேளை, பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், டாக்டர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications