சர்க்கரை நோயாளிகள்.. வெறும் வயிற்றில் "இதை" சாப்பிடறீங்களா? ஆச்சரியம் தரும் இலையை பாருங்க.. சூப்பர்
சென்னை: பெரும்பாலான ஜூஸ்கள் நமக்கு நன்மையே தருகின்றன.. அந்தவகையில், பீட்ரூட் சாறும் ஒன்று.. ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
பீட்ரூட் காய்களை ரத்தக்காய் என்பார்கள்.. காரணம், நம்முடைய ரத்தசோகை நோய் பிரச்சனையை தீர்ப்பதில், இந்த காய்க்கு பெரும்பங்கு உண்டு.. இந்த பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் என நிறைந்துள்ளன..

150 கிராம் பீட்ரூட்டில் வெறும் 58 கலோரிகள் மட்டுமே இருப்பதால், உடல் எடை குறைபவர்களும் இதை எடுத்து கொள்வார்கள்.. பெரும்பாலும் இந்த ஜூஸை அப்படியே ஜூஸ் போட்டு குடிக்க கூடாது.. ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி, எலுமிச்சம் சாறு, கேரட், முள்ளங்கி இப்படி ஏதாவது ஒன்றை சேர்த்துதான் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்..
எலுமிச்சம் சாறு: குறிப்பாக, கேரட் + பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து, சிறிது இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து ஜூஸ் போல தயாரித்து வடிகட்டி குடித்து வரலாம்..
இதில் சிறிது மிளகு தூளையும் சேர்த்து கொள்ளலாம். இதனால், உடல் சுத்தமடையும்.. செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.. ஆண்மையை அதிகரிக்க செய்யும் மிகச்சிறந்த ஜூஸாக இது திகழ்கிறது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் இந்த ஜூஸ் பெரும்பலனை தரும்.. கல்லீரல் பிரச்சனைகளும் தீரும்..
கழிவுகள்: சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் இந்த பீட்ரூட் ஜூஸ் அகற்றுகிறது.. அல்சருக்கு இந்த ஜூஸ் நல்லது.. ஆனால், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே எடுத்து கொள்ளலாம்..
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நைட்ரிக் ஆக்சைட்டின் அளவு குறைவாக இருக்கும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளதால் இது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது. அதிலும் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், மிகவும் நல்லது.. பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட்ஸ், ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது..
உடல் எடை: தொப்பை மற்றும் இடுப்பை சுற்றிலும் கொழுப்பு உள்ளவர்கள், அதிக உடல் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, நார்ச்சத்து அதிகம் கிடைப்பதுடன், பசி எடுக்காமல் இருக்கும்..
ஆனால், ஒருசிலர் இந்த ஜூஸை தவிர்க்க வேண்டும் என்பார்கள்.. நிறைய ஜூஸ் குடித்தால், காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை உடலில் தேங்க ஆரம்பிக்குமாம். அதிலும் ஹீமோகுரோமடோடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஜூஸை தவிர்க்கலாம்.. அதேபோல, சிறுநீரக பிரச்சனைகள் இருப்பவர்கள், சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கலாம்.. காரணம், இந்த பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் என்ற பொருளானது, நம் உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்துவிடுமாம்.
எலும்புகள்: எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், இந்த ஜூஸ் அதிக அளவு தேவைப்படாது.. கர்ப்பிணிகள் ஜூஸ் போல குடிக்காமல், பொரியல் போல செய்து சாப்பிட்டால் நல்லது.. நிறைய பீட்ரூட் ஜூஸ் குடித்தால், வயிற்றுப்போக்கு வரலாம்.. சிலருக்கு காய்ச்சலம் வரலாம்.. கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்கலாம்.. அல்லது அரிப்புகள் தோன்றலாம்.
எனவே, சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், சரும அலர்ஜி உள்ளவர்கள், டாக்டரை ஆலோசிக்காமல் இந்த ஜூஸை எடுத்து கொள்ளக்கூடாது.
கனிமங்கள்: பீட்ரூட் இலையில், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் C, நிறைய வைட்டமின்களும், கனிமங்களும் அடங்கியுள்ளன..
சுருக்கமாக சொன்னால், பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.. அத்துடன் இலைகளை பொடியாக நறுக்ககூடாது என்றும் சொல்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள்: பீட்ரூட் இனிப்பாக இருந்தாலும், இதன் இலைகள் ரத்த சர்க்கரையை குறைக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.. கல்லீரலின் கொழுப்பையும் கரைக்கின்றன. ரத்த ஓட்டம் சீராகிறது. செரிமான கோளாறுகளை நீக்குகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரக்கூடியது.. குறைவான கலோரி உணவான இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இலையில் சூப் போட்டு குடிக்கும்போது, பலன் இரட்டிப்பாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications