முருங்கையின் விதை.. தலைமுடி சும்மா கருகருனு வேணுமா? முருங்கைக்காயை எடுங்க.. சருமம் மின்னும் பாருங்க
சென்னை: சரும பொலிவுக்கும், கருகரு தலைமுடிக்கும், மிகப்பெரிய நன்மைகளை முருங்கைக்காய் தருகின்றன.. எப்படி தெரியுமா?
முருங்கைக்காயில், அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் உள்ளன.. இது எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன..

மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் அருமருந்தாகும்.
ரத்தசோகை: ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான பயனாகும்.. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கும் நன்மைகளை வாரிதருகிறது.
தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கை சிறந்தது.. ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும். கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. முக்கியமாக, இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான் என்கிறார்கள்..
கருமுட்டை: கண் பார்வை கோளாறுகள் குறிப்பாக, தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை சரிசெய்யக்கூடியது இந்த முருங்கைக்காய்.. முருங்கைக்காயை அடிக்கடி ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் எளிதில் தீர்கின்றன.. பெண்களுக்கு கருமுட்டை வலுப்பெற இந்த காய் பேருதவி புரிகிறது.
முருங்கையை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் என்றால், சருமத்துக்கும், தலைமுடிக்கும் பயன்படுத்தும்போது, வேறு பல நன்மைகளை தருகிறது. இந்த முருங்கையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான், சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.. அதனால்தான், அழகுசாதன பொருட்கள், ஷாம்பு தயாரிப்புகளில் இந்த முருங்கையின் எண்ணெய்யை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.
கொலாஜன்: இதற்கெல்லாம் காரணம், நம்முடைய சருமத்திற்கு தேவையான, கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்க உதவும் பண்பு, இந்த முருங்கையில் நிரம்பியிருக்கிறதாம்.
குறிப்பாக, வைட்டமின் C முருங்கையில் அதிகம் என்பதால், சருமத்துக்கு பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் இந்த முருங்கை தருகிறது. இதனால் சரும துளைகள் மூடப்படுகின்றன.. முகப்பருக்கள் நீங்குகின்றன. பளபளப்பை தருகின்றன.. வறட்சியை நீக்குகின்றன.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த முருங்கைக்காய வயதான சுருக்கத்தையும் தள்ளிப்போடுகின்றன..
வெறும் முருங்கைக்கீரையை நிழலில் காய வைத்து, பவுடராக்கி முகத்தில் தடவினாலே முகப்பரு, வெயில் கருமை போன்றவை நீங்கும்... முகம் பளிச்சிடும். தலைமுடி அதிகமாக கொட்டுபவர்கள் இந்த முருங்கை விதைகளை, எண்ணெய்யில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்.
எண்ணெய்: முருங்கை விதைகளை அதாவது முருங்கைக்காயில் உள்ள சதைகளை எடுத்து லேசாக அரைத்து கொள்ள வேண்டும். கறிவேப்பிலையையும் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும் ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், கற்றாழை ஜெல், அரைத்த முருங்கைக்காய் விழுது, கறிவேப்பிலை விழுது அனைத்தையும் கொட்டி காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெய்யை ஆறவைத்து எடுத்து வைத்து, தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி வளர்ச்சி பெறும்.. தலைமுடி உதிர்வும் கட்டுப்படும்.












Click it and Unblock the Notifications