Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கைக்கீரையை விடுங்க.. முருங்கை விதையே போதும்.. கருகருன்னு தலைமுடிக்கு முருங்கை விதை எண்ணெய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கை மரத்தில், பூ, காய், விதை என அனைத்துமே ஆண்களின் அருமருந்து என்றே சொல்லலாம்.. இயற்கை அளித்த வயாக்ராவாக இந்த முருங்கை மரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் முருங்கை விதை எண்ணெய்யும் மிக முக்கியமானது.
முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற சத்துக்கள் உள்ளதால், இதனை பெரும்பாலும் லேகியம் தயாரிக்கவே பயன்படுத்துகிறார்கள். முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

விந்து கெட்டிப்படும்: இந்த முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும். பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்களும் அதிகரிக்கும். எனினும் மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும்.

Do you know Health Benefits of Drumstick Seed Oil and Do you know How to Cook Drumstick Leaves Gravy

காய்கறிகள்: விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை நீங்கிவிடும்.. முருங்கை விதை, இதயத்தை பலப்படுத்தும்.. சர்க்கரை நோய் வந்தவர்களும், அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறிகளில் முருங்கையும் ஒன்றாக உள்ளது.. முருங்கை விதைகளை பொடி செய்து, சூப் ஆகியவற்றில் மிளகுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கால்சியம் அதிகமாக உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதித்தன்மையை தரும்.. இதயத்திற்கும் நல்லது.. காரணம், இதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் முருங்கை விதை சூப் சிறப்பாக செயல்படுகிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

முருங்கை விதைகள்: இந்த முருங்கை விதையிலிருந்து தயாரிப்பதுதான், முருங்கை எண்ணெய்.. சருமத்துக்கும் கூந்தலுக்கும் நிறைய ஆரோக்கியத்தை தரக்கூடியது.. இந்த எண்ணெயிலும், புரோட்டீன், நிறைவுற்ற கொழுப்பு போன்ற சத்துக்கள் இருக்கின்றன..

இந்த எண்ணெய்யை சமையலும் செய்யலாம்.. தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். சருமத்துக்கும் பயன்படுத்தலாம்.. முருங்கை கீரையை சாப்பிட்டால் தலைமுடி எவ்வளவு அடர்த்தியாக வளருமோ, அந்த அளவுக்கு கூந்தல் அடர்த்தியை, இந்த முருங்கை எண்ணெய்யும் தருகிறது.. வேர்க்கால்களில் இதை பூசி வந்தால், தலைமுடிகள் பலப்படும்.. சரும வறட்சியை நீக்கி, ஈரப்பதத்தை தலையில் தக்கவைக்கும்..

முருங்கை எண்ணெய்: வாரம் 3 முறையாவது, இந்த எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்து குளித்து வரலாம். இந்த முருங்கை எண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய்யும் சேர்த்து தேய்த்தால் இன்னும் பலன் கிடைக்கும்.

இந்த எண்ணெய்யை நாமே தயாரிக்கலாம்.. முருங்கையில் உள்ள விதைகளை மட்டும் வெளியே எடுத்து, வாணலியில் கொட்டி வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வறுத்த விதைகளை அந்த நீரில் போட்டு மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

பாதாம் எண்ணெய்: அப்போது, விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்.. அடுப்பை குறைத்து வைத்துக் கொண்டு, அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து சேமித்து கொள்ள வேண்டும். பிறகு அவைகளை அப்படியே விட்டுவிட்டு, 3 நாட்கள் கழித்து பார்த்தால், எண்ணெய் மட்டுமே தங்கியிருக்கும். இந்த எண்ணெய்யைதான் நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதனுடன், பாதாம் எண்ணெய்யும் கலந்துதான் பயன்படுத்த வேண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+