வெறும் இந்த இலையே போதும்.. வெயிட் லாஸ் முதல் குழந்தை பேறு வரை.. ஆச்சரியங்கள் தரும் அதிசய பழங்கள்
சென்னை: கருப்பை கோளாறு முதல் உடல் எடை குறைப்பு வரையுள்ள பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய பழம் இருக்கிறதென்றால், அது இந்த அத்திப்பழம்தான்.
அத்திப்பழத்தில், ஏகப்பட்ட இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் C,A,K,E, போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மரத்தின் அடிமரத்தில் கொத்து கொத்தாக இருக்கும் இந்த பழத்தில், மற்ற பழங்களைவிடவும்,2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப்பொருட்களும் அடங்கியிருக்கின்றனவாம். அதிலும், இரும்புச்சத்து மிகவும் அதிகம்.
உடல் எடை: இதனால், உடல் எடை குறைக்க நினைப்போருக்கு இந்த பழம் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.. ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால், உடல் எடை குறைவதுடன், நீண்ட நேரத்துக்கு பசி உணர்வும் தெரியாது. எலும்புகளும், பற்களும் வலுப்படுத்தும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றுக்கு அத்திப்பழம் தீர்வு தருகிறது.
ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் சரி, நீரிழிவு நோய் இருப்பவர்களும் சரி, இந்த அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். ஆனால், இந்த பழத்தில் இனிப்பு தன்மை இருப்பதால், சர்க்கரை நோயாளிகள், காய்ந்த பழத்தை நேரடியாக சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, பச்சையான அத்திக்காயை சமையலில் சேர்த்துக்கொண்டு, பொரியல் போல செய்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, இதிலுள்ள நார்ச்சத்து உதவி செய்கின்றன.

அத்திப்பழம்: இந்த தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டாலும் அல்லது காய்ந்த அத்திப்பழத்தை நேரடியாக சாப்பிட்டாலும் பலன்கள் குறைய போவதில்லை. ஆனால், தினமும் ஊறவைத்த 3 அத்திப்பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் விலகுமாம்.. அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
அதுமட்டுமல்ல, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். குடலை சுத்தப்படுத்தி, ஆசனவாய் வெடிப்பு, மூலவியாதி வராமல் தடுத்து நிறுத்துவதில், இந்த பழத்திற்கு நிறைய பங்கு உண்டு.. அதனால்தான், மூலநோய் உள்ளவர்கள், இந்த அத்தி பழத்தை சாறு பிழிந்து, தேன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
ரத்த விருத்தி: அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு வெண்குஷ்டம், வெண்புள்ளிகள், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமாகும். பித்தம் அதிகமாகிவிட்டால், இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது, நிவாரணம் கிடைக்கும். ஹீமோகுளோபின் பிரச்சனையை இந்த பழம் சரி செய்கிறது.. இந்த அத்தி மரத்தின் பட்டையை ஊறவைத்து, காலையில் குடித்து வந்தால், வாத நோய், மூட்டு வலிகள் குணமாகும்..
பற்களுக்கும் ஈறுகளுக்கும் இந்த பழம் மிகவும் நன்மை தரக்கூடியது.. ஈறுகள் பலவீனமடைந்து சீழ்பிடித்துவிட்டால், அல்லது ஈறுகளில் வலி இருந்தால், இந்த பழத்தின் இலைகளே சிறந்த தீர்வை தந்துவிடும்.. அத்திமர இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்துவந்தாலே, ஈறுகள் பலப்படும்.. வலியும் குறையும். அதேபோல, இந்த மர இலைகளை வெயிலில் உலர வைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டு, தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம் தீரும்.
முக சுருக்கங்கள்: அத்திப்பழத்தில் ஏராளமானதாதுக்கள், வைட்டமின்கள் உள்ளதால், புதிய செல்கள் உருவாகின்றன.. முக்கியமாக, ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் அவ்வளவு லேசில் விழாது என்றும், ஆண்களின் விந்துக்களின் தரத்தையும் இந்த பழம் மேம்படுத்துவதாக சொல்கிறார்கள்.
இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆண், பெண் இருவரும் பாலில் ஊற வைத்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், பலன் கிடைக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications