கத்தை கத்தையா கையோடு தலைமுடி.. இந்த "பழம்" போதுமே.. அடர்த்த தலைமுடி வரும்.. வியப்பூட்டும் கொய்யா இலை
சென்னை: தலைமுடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த நிவர்த்தி செய்ய ஒரே காரணம், சத்தான உணவுகள்தான்.. அந்தவகையில், பழவகைகள் என்னென்ன சாப்பிடலாம் தெரியுமா?
தலைமுடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..

உடலில் ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருந்தாலும் முடி கொட்டலாம். அதனால், ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்: அதேபோல, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.
ஆக, நம்முடைய தலைமுடிக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது.. நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + தேவையான குடிநீர் + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. முடி வளர்ச்சிக்கு இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.. இதில், கீரைகள், விதைகள், காய்கறிகள், போன்றவைகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
உணவு: அந்தவகையில், சிலவகை பழங்களுக்கும் முடிவளர்ச்சியில் நிறைய பங்கு உள்ளது. இதில், முக்கியமானது நெல்லிக்காய்.. ஏகப்பட்ட ஆக்சிஜனேற்ற பண்பினை கொண்டது.. தலைமுடிக்கும், நரை முடிக்கும் நெல்லிக்காய் போன்ற சிறந்த தீர்வு இல்லை..
பொடுகு, அரிப்பு, முடி உதிர்வது, பலவீனமான தலைமுடி போன்ற அனைத்துவிதமான கோளாறுகளையும் நெல்லிக்காய் சரி செய்கிறது.. நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதும். அல்லது நெல்லிக்காயை வெட்டி, அதனுடன், கற்றாழையும் சேர்த்து ஜூஸ் போல குடிக்கலாம்.
வெள்ளரிக்காய்: அடுத்ததாக வெள்ளரிக்காய் உதவுகிறது.. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த இந்த வெள்ளரிக்காயை ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.. அத்துடன், புதினா, கொத்தமல்லி, சேர்த்து கொள்ளலாம். இதற்கு அடுத்தபடியாக பப்பாளி பழம் உதவுகிறது.. பப்பாளியை தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தாலே, தலைமுடி உதிர்வது நின்றுவிடுவதை கண்கூடாக பார்க்கலாம்..
அதேபோல, மாதுளம்பழங்கள் தலைமுடியை வலுப்படுத்த உதவுகிறது.. நார்ச்சத்து மிகுந்தது என்பதால் விதைகளுடன் இந்த பழத்தை சாப்பிட சொல்வார்கள்.. இந்த விதையில் மருத்துவ குணங்கள் நிறைய இருப்பதால்தான், அதிலிருந்து தலைமுடிக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. தலைமுடி பிரச்சனையை தீர்ப்பதில், மாதுளம் விதை எண்ணெய்க்கு பெரும்பங்கு உண்டு.
கொய்யா: அதேபோல, ஆப்பிள், அன்னாசி, கொய்யா போன்றவற்றை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.. எந்த பழத்தில் ஜூஸ் தயாரித்தாலும், அதில் எலுமிச்சம் சாறு கலந்து கொள்வது கூடுதல் பலன் தரும்.. அதேபோல, இதில், பப்பாளி, ஆப்பிள் போன்றவைகளை கூழாக அரைத்து தலைக்கு, பேக் போல பயன்படுத்தினால், பெஸ்ட் கண்டிஷனர்களாக விளங்கும்.












Click it and Unblock the Notifications