குப்பைக்கீரை.. வேற லெவலுக்கு எகிறும் ஹீமோகுளோபின்.. பலன் தரும் பாலக்கீரை..ரத்தசோகையை விரட்டும் கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீமோகுளோபின் பிரச்சனையை எளிதில் சரி செய்ய முடியுமா? இயற்கையான முறையில் ரத்த விருத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன?
உலகமெங்கும் கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.. அதுவும், 5 வயதிற்குட்பட்ட 42% குழந்தைகளும், 40% கர்ப்பிணிப் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) கவலையுடன் சொல்கிறது. இரும்புச்சத்து, வைட்டமின்C, B12 நிறைந்த உணவுகள் ரத்த விருத்திக்கு உதவுகின்றன..

காய்கறிகளில் கத்தரிக்காய், பீட்ரூட், பீன்ஸ், என இரும்புச்சத்து நிறைந்தவை தாராளமாக சாப்பிடலாம்.. ஃபோலிக் அமிலங்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டாலே இந்த குறைகள் தீரும்.. வைட்டமின் C நிறைந்த சிட்ரஸ் பழங்களான, எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்ச் போன்றவை ரத்த விருத்திக்கு உதவி புரிகின்றன. சமையலில், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை நிறைய பயன்படுத்தலாம்.

Do you know Health Benefits of Kuppai Keerai and Super Green Leaves that help in solving Hemoglobin

பெரும் பிரச்சனை: ஹீமோகுளோபின் பிரச்சனை என்றாலே அதை எளிதில் சரிசெய்யக்கூடியது கீரைகள்தான்.. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 - 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவுக்கு கீழே குறையும்போது, அது ரத்த சோகை என்ற நோயாய் உருமாறுகிறது.. இதுவே மற்ற நோய்களும் அடிப்படையாகிவிடுகிறது.

எனவேதான், கீரைகளை தவறாமல் சாப்பிடும்போது, பெரிய நோய்கள் எளிதில் அண்டாது.. அந்தவகையில், முருங்கைக்கீரையே பிரதான கீரையாக விளங்குகிறது. இந்த கீரையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும், அவ்வளவும் நன்மை கிடைக்கும்..

ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு இப்படி இன்னும் ஏகப்பட்ட கோளாறுகளை இந்த ஒரே ஒரு கீரை சரிசெய்துவிடும்.
பாலக்கீரை: பாலக்கீரையில் அதிகப்படியான இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன.. இந்த பாலக்கீரை உடலின் ரத்த அளவை அதிகரிக்க செய்கிறது.. எனவே, இந்த கீரையை அடிக்கடி செய்து சாப்பிட்டால் பலநோய்களிலிருந்து நிவாரணம் காணலாம்.

அடுத்ததாக கறிவேப்பிலை மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்துள்ளன.. இந்த போலிக் ஆசிட் என்பது, நம்முடைய முக்கியமாக உடலில் உள்ள இரும்புச்சத்தை ஈர்ப்பதற்கு பேருதவி புரிகின்றன..

கறிவேப்பிலை: 100 கிராம் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து 8.67 மி.கி.,117 மைக்ரோகிராம் போலிக் அமிலம்,வைட்டமின் B12 இருக்கிறதாம். அதனால்தான், கர்ப்பிணிகளையும் கறிவேப்பிலையை தவறாமல் சாப்பிட சொல்கிறார்கள், இதனால், ரத்த சோகை ஏற்படாமல் இருப்பதுடன், பிறக்கும் குழந்தைகள் எந்தவித குறையும் இல்லாமல் பிறக்குமாம்.

இதில், புளியங்கீரையையும் சேர்த்து கொள்ளலாம்.. புளியங்கீரையை அதிகமாக சமைத்து வந்தால், பலன் அதிகமாகும்.. அனிமீயா பிரச்சனையை தீர்ப்பதுடன், கண் சம்பந்தமான நோய்களையும் தடுத்து காக்கிறது. அதேபோல, வெள்ளை கரிசலைக்கீரையையும் ரத்த சோகை நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம்.

குப்பைக்கீரை: குப்பைக்கீரை பற்றி பலரும் அறிவதில்லை.. வைட்டமின்கள் A, C சத்துக்கள் உள்ளதால், நோயெதிர்ப்பு செயல்பாடு சற்று அதிகமாகவே இந்த கீரையில் இருக்கும்.. தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. கண் பார்வை கூர்மையாகின்றன.. உடற்சூடு தணியும்.. சொறி சிரங்குகள் அகலும்.. நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நிங்கும்.. வயிற்றுப் புண்ணையும், வாய்ப்புண்ணையும் ஆற்றும்.

இந்த கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியமும் அபரிமிதமாகவே உள்ளதால், ரத்தசோகை உள்ளவர்கள், அடிக்கடி இந்த கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால், வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுவதுடன், இளமையான தோற்றத்தை நீடிக்க வைக்கிறது இநத கீரை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+