முடவாட்டுக்கால் கிழங்கு.. முடக்கத்தான் கீரை.. இது 2 போதுமே.. முடங்கிடாமல் இயங்க வைக்கும் செம மருந்து
சென்னை: உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள், முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். இந்த முடக்கு வாதத்துக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? இந்த வாதத்தை போக்க உதவும் உணவுகள் என்னென்ன?
முடக்கு வாதம் என்றாலே, அது எலும்பு தொடர்பான நோய் அல்லது மூட்டுவலி என்பது போல நினைத்து கொள்கிறார்கள். பொதுவான தன்னுடல் தாக்க நிலையே, முடக்குவாதமாகும்.. அதாவது, பல நோய்களின் கூட்டுதான் இந்த முடக்கு வாதம். இதில் 300 முதல் 500 வகைகள் இருக்கிறதாம்.

முடக்கவாதம்: இது மூட்டு, தசைகள், இணைப்பு திசுக்கள் போன்றவற்றுடன் தொடர்புடையதாகும்.. இதனால், உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிப்படையலாம்.. உறுப்புகளையும் பாதிக்ககூடியது.
கிட்டத்தட்ட சர்க்கரை வியாதியை போலவே, இந்த முடக்கு வாத நோய்களையும் முழுமையாக குணப்படுத்த முடியாது.. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்க முடியும்..
ஒருவேளை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம. அல்லது, கவனிக்காமலேயே விட்டுவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும்.
சர்க்கரை: இந்த முடக்குவாதத்தை தவிர்க்க, உணவில் பெரும்பாலும் கவனம் செலுத்த வேண்டும்.. அதாவது, சர்க்கரையை மிகக்குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.. அதேபோல, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.. பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக, பச்சை காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
இதில், மிக முக்கியமானது முடக்கத்தான் கீரையாகும்.. ஏகப்பட்ட புரோட்டீன்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், வைட்டமின்கள், போன்றவை அதிகம் இந்த கீரையில் உள்ளன. சிலருக்கு காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலையாகும். இதற்கு பெரிதும் உதவுகிறது முடக்கத்தான் கீரை.
முடக்கத்தான் கீரை: முடக்கத்தான் கீரையை, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், அதிகம் கொதிக்க வைத்து சாப்பிடக்கூடாது.. தோசை மாவில் கரைத்து, தோசை செய்தும் சாப்பிடலாம். இதனால், உடம்பில் வாதத்தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும்... முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில் நனைத்து, மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வந்தாலும், நிவாரணம் கிடைக்கும்.
அதேபோல, ஆட்டுக்கால் கிழங்கு சூப் குடிக்கலாம்.. இதனை ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் சொல்வார்கள்..
முடவாட்டுக்கால்: ஆனால், இது கிழங்கு வகை கிடையாது. இது ஒரு தாவரம்.. இது மலைப்பகுதிகளில் குறிப்பாக, ஏற்காடு, கொல்லிமலை, சேர்வராயன் மலை, சதுரகிரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையக்கூடியது. பார்ப்பதற்கு கம்பளி போர்த்தியதுபோலவும் காணப்படும்..
ஆட்டின் கால் குளம்புகளைப்போலவே இருக்கும். இதன் ருசியும் ஆட்டுக்கால் போலவே இருக்கும்... கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் என பல சத்துக்கள் இந்த கிழங்கில் நிறைந்துள்ளன...
மூட்டுவலிகள்: முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் இந்த கிழங்கு மிகவும் நல்லது. பெரும்பாலும் இதனை சூப் வைத்து சாப்பிடுவார்கள். அல்லது இந்த கிழங்கில் ரசம் அல்லது சாறு போலவும் தயாரிக்கலாம். இந்த கிழங்கில், சட்னி செய்யலாம்.. துவையல் போல அரைத்து பயன்படுத்தலாம்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications