கல்லீரலை காக்கும் நன்னாரி.. வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி வேர்கள்
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய சக்தி இந்த நன்னாரிக்கு உண்டு.
வெயில் காலத்தில் சர்பத் தயாரித்து இந்த நன்னாரியை சாப்பிடுவோம். ஆனால், இந்த நன்னாரியின் வேர்களை, நன்றாக அலசி சுத்தப்படுத்திவிட்டு, பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்தியோ மண்பானை நீரில் போட்டு சேர்த்து குடித்து வந்தால், உடலிலுள்ள உஷ்ணங்கள் எல்லாமே நீங்கிவிடும். அந்த அளவுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வேர்கள்.

இந்த வேர்களை இடித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வைத்து கொண்டாலே பல நோய்கள் பஞ்சாய் பறந்துவிடும்.. அல்லது நன்னாரி வேரை இடித்து, தண்ணீரில் ஊறவைத்து, இந்த தண்ணீருடன் சிறிது கருப்பட்டி சேர்த்து குடித்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்..
பற்கள் ஈறுகள்: குழந்தைகளுக்கு இந்த பானத்தை குடிக்க தந்தால், செரிமானம் எளிதாக நடைபெற்று பசி அதிகரிக்கும்.. இந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால், பற்களும் ஈறுகளும் பலமடையும்.. கிருமிகள் நீங்குவதுடன், துர்நாற்றமும் பறந்தோடிவிடும்.
ஒற்றை தலைவலி, செரிமானம், பித்தம், போன்றவற்றை தணிக்க இந்த நன்னாரி வேர்கள் உபயோகமாகின்றன. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருந்தால், இந்த நன்னாரி நீரை குடிக்கலாம்.. சிறுநீர் நன்றாக பிரிந்துவிடும். அல்சர் புண்களை நெருங்க விடாமல் தடுக்கிறது.. கல்லீரலை பாதுகாக்கிறது.. முடக்குவாதத்தை அண்ட விடாமல் காக்கிறது.. சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கிறது..
ஒற்றை தலைவலி: ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும். நன்னாரி வேர்களை சூரணம் போல தயாரித்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையும் குணமாகும்.ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.. இதனால், சருமத்தில் வயதான சுருக்கங்களும் தள்ளிப்போடப்படுகின்றன.. சரும ஆரோக்கியம் செழிக்கிறது..
மூளை செல்களை விரைவாக அழிந்துவிடுவதில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது இந்த வேர்கள் காக்கின்றன..
உதிரப்போக்கு: பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால், வேரை சுத்தம் செய்து, அதை பாலில் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வந்தாலே அதிக உதிரப்போக்கு மட்டுப்படும். வெள்ளைப்படுதல் நோயும் மெல்ல மெல்ல குணமாகும்... இந்த வேர்களுடன், மல்லி விதைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து, பால், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட்டால், பித்தம் தொடர்பான அத்தனை கோளாறுகளும் நீங்கிவிடும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications