வெறும் வயிற்றில் இந்த 5 இலை போதும்.. ஆயுளை கூட்டும் அற்புத இலைகள்.. பச்சையா சாப்பிட்டாலே கூடும் பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலவகை இலைகளை, சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக மென்று சாப்பிடுவதே கூடுதல் பலனை தந்துவிடும். அதிலும், வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கின்றன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
முதலாவதாக துளிசி இலைகளை சொல்லலாம்.. "மூலிகைகளின் ராணி" என்று சொல்லப்படுவது இந்த துளசியைதான்.. கோயில்களுக்கு நடுவே துளசிகள் வளர்க்கப்படுகின்றன.. துளசிக்கு இன்னொரு பெயர் பிருந்தை என்பார்கள்.. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருக்கிறதாம்..

துளசி இலைகள்: என்றுமே இளமையுடன் வாழ உதவுகிறது துளசி நீர்... சுத்தமான செம்பு பாத்திரத்தில், நீரை ஊற்றி, ஒரு கைப்பிடி துளசியை போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு வைத்துவிட வேண்டும்.. காலையில், வெறும்வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால், எந்த நோயும் அண்டாது.. இப்படி 48 நாட்கள் செய்ய வேண்டும்.. இதனால், தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும்... பார்வை குறைபாடு நீங்கும்.

Do you know Health Benefits of Neem Leaves and Thulasi is the Best medicinal uses for All

அல்லது துளிசியில் டீ தயாரித்து குடிக்கலாம். ஒரு கப் தண்ணீரில், ஒரு கைப்பிடி துளசியை போட்டு கொதிக்க விட வேண்டும்.. 10 நிமிடங்கள் காய்ச்சிய பிறகு, அதில், 1 டீஸ்பூன் தேன் + 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.

இதனால், உயர் ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு துளசி அருமருந்தாகும்... அல்லது ஒரு கப் தண்ணீருடன் தேவையான அளவு துளசி இலைகளை சேர்த்து சில மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.

நிறமாற்றம்: ஆனால், துளசியை அதிக அளவு மென்று சாப்பிடக்கூடாது.. காரணம், பாதரசம், இரும்புச்சத்து போன்றவை இதிலுள்ளதால், நாம் மெல்லும்போது அவை வெளிப்படும்.. அதனால் பற்களை கறைபடுத்தும்.. நிறமாற்றத்தையும் பற்களுக்கு தந்துவிடுவதுடன், எனாமலில் தேய்மானத்தையும் ஏற்படுத்தும்.. அதனால், லேசாக மெல்ல வேண்டும்.. அல்லது முழுவதுமாக துளசியை விழுங்க வேண்டுமாம்.

அடுத்ததாக வேப்பிலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பெருத்த பலன்கள் கிடைக்கும். இதற்கு வேப்ப இலையை நாலஞ்சு எடுத்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமாம்.. தினமும் 5 முதல் 6 வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.. ரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியை தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வேப்பிலைகள்: அல்லது, வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். இதனால், மஞ்சள் காமாலை ஆபத்து நீங்குவதுடன், கல்லீரலில் ஏற்படும் தொந்தரவையும் சரி செய்துவிடும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவும்.

இந்த வேப்பங்கொழுந்து இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் தரும்போது, வயிற்று பூச்சிகள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.

இளநரைகள்: தோலின் அடுத்ததாக, கறிவேப்பிலை.. சித்த மருத்துவத்தில், இந்த கறிவேப்பிலைக்கென்று ஸ்பெஷல் இடம் உள்ளது.. எதிர்ப்பு சக்தியாக திகழ்வதுடன், தோலின் நிறத்தையும் பொலிவுடன் வைத்திருக்க கறிவேப்பிலை உதவுகிறது. இளநரையை தடுப்பதில் கறிவேப்பிலைக்கு இணை வேறு கிடையாது.. கறிவேப்பிலையை அடிக்கடி பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பும் சேராது...

வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்... நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்..

புதினா இலைகள்: அடுத்ததாக புதினா இலைகளை சொல்லலாம்.. ஒரு கிளாஸ் தண்ணீரில், சில புதினா இலைகள், எலுமிச்சம் சாறு கலந்து அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தாலே போதும்..

இது நம்முடைய வாயில் தோன்றும் துர் நாற்றத்தை குறைக்கும். மேலும் பல்லில் படியும் கரையையும் குறைக்கும். மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தில் இருக்கும் துளைகளை இருக்கமாக்கும். உடலின் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. இதனால் சருமம் வயதாவதும் தடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+