கருவாடு செய்றீங்களா.. அப்ப நெத்திலி கருவாட்டின் சர்ப்ரைஸை பாருங்க.. சுண்டியிழுக்கும் நெத்திலி ஊறுகாய்
சென்னை: நெத்திலி மீனில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா? உடல் எடையை குறைப்பதில் நெத்திலியின் பங்கு என்னென்ன தெரியுமா?
கேரளாவில் நெத்திலி மீன் மிகவும் பிரபலமானது... மிகவும் குளிராக இருக்கும் நீர்ப்பகுதிகளில் இந்த மீன் இருப்பதில்லை.. நெத்திலி எண்ணெய் நிறைந்த மீன் வகையாக இருப்பதால் இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.. இதயத்திற்கு ஆரோக்கியமானது..

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது.. புரதம் அதிகம் இருப்பதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. கலோரிகளும் குறைவு, புரோட்டீன்களும் அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க நெத்திலி மீன்கள் உதவுகின்றன.
உடல் எடை குறைய : ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நெத்திலியை பொரித்து சாப்பிடக்கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த இந்த மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால், முழு சத்தும் கிடைக்கும்..
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளும் குறையும். அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.. கண் பார்வை கூர்மையாகும்.. கால்சியம் அதிக அளவில் இருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு உறுதுணையாகின்றன. செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்க, பெண்களுக்கு நெத்திலி மீனை சமைத்து தருவார்கள்..
நெத்திலி கருவாடு: இதில் நெத்திலி கருவாடு கூடுதல் ஸ்பெஷலாகும்.. இதில், வறுவல், குழம்பு என இரண்டையுமே செய்யலாம்.. நெத்திலியை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்தாலே, அதிலுள்ள மண், கழிவுகள், நீங்கிவிடும்..
தேவையற்ற உறுப்புகளையும், அதன் தலையையும் கைகளாலேயே கிள்ளி எறிந்துவிட்டு, மண் இல்லாமல் சுத்தமாக, 3 முறை கழுவி கொள்ள வேண்டும். பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள் ஊறவைத்து, எண்ணெய்யில் பொரித்து எடுத்தால், வறுவல் ரெடி.
கருவாட்டு ஊறுகாய்: இந்த நெத்திலி கருவாட்டில் ஊறுகாய் செய்யலாம்.. இதற்கு ஒரு வாணலில், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய் இதெல்லாம் எண்ணெய் இல்லாமல் வெறுமனே வறுத்து எடுத்து பொடித்துகொள்ள வேண்டும்..

இப்போது, அதே வாணலில், நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு, துருவின பூண்டு, துருவின இஞ்சி, கறிவேப்பிலையை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மூன்றையும் வதக்கி, வறுத்த பொடியையும் அதில் சேர்த்து கிளற வேண்டும்.
அடுத்ததாக, கெட்டியாக கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரையும் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். இப்போது சுடுநீரில் சுத்தம் செய்யப்பட்ட கருவாடை இதில் சேர்த்து, பெருங்காய தூளையும் சேர்க்க வேண்டும். இறுதியில், வினிகரையும் சேர்க்க வேண்டும். 50 கிராம் கருவாடு என்றால், 2 ஸ்பூன் அளவுக்கு மட்டும் வினிகர் சேர்த்தால் போதும். நெத்திலி கருவாடு ஊறுகாய் ரெடி.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications