இத்துணூன்டு விதை.. மொத்தமா உங்க வெயிட்டை குறைச்சிடும் பாருங்க.. இந்த 2 விஷயத்தையும் மறக்காம பண்ணுங்க
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், நன்மை பயக்கும் 2 வகையான விதைகளை பார்ப்போம்.பரங்கிக்காய் விதை இதில் முக்கியமானது.. பரங்கிக்காய் இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம். அதனால், பரங்கி விதை பூசணி விதை என்று அழைக்கப்படுகிறது.
பரங்கிக்காய்: வழக்கமாக, பரங்கியில் காய் மட்டுமல்ல, இதன் இலைகளையும் சமைக்கலாம். பிஞ்சு பரங்கிக்காயில் வறுவல் செய்வார்கள்.. பரங்கிக்காயில் புளிக்குழம்பு, சாம்பார், பொரியல் கூட்டு, சூப், அல்வா என பாயாசம் என பலவகைகள் செய்வார்கள்.. பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்பார்கள்.. இந்த பரங்கி விதைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்து எடுத்து வைத்து கொண்டால், நிறைய தீர்வுகளுக்கு பயன்படுத்தலாம்.. ஏகப்பட்ட புரோட்டினும், அசிட்டிக் ஆசிட்டும் இந்த விதையில் உள்ளது..
வைட்டமின் B: இதைத்தவிர, வைட்டமின் B, தையமின், நியாசின் போன்ற சத்துக்களும் உள்ளன. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
நார்ச்சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ் போன்றவை இந்த விதையில் உள்ளதால், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.. அதாவது, வெறும் 100 கிராம் பூசணி விதைகளில், 18 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்..
மூட்டு வலி: இது ஒரு சராசரி மனிதனின் தினசரி தேவையில் 72 சதவீதமாகும். இதனால், ஆரோக்கியமான வழியில் எடை குறைக்கவும் உதவுகிறது. அதேபோல, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த விதைகளை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. குடற்புழுக்களும் நீங்கிவிடும்.
எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதி தரக்கூடியவை.. பெண்கள் தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தடுக்கலாம். அதேபோல, ஆண்களும் தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால், விந்தணு எண்ணிக்கையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கலாம்.
பூசணி விதைகள்: அதேபோல, தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைவதாகவும், கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.
இதேபோல சுரைக்காய் விதையும் மிக முக்கியமானது.. சுரைக்காயில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், இதுவும் எடை இழப்புக்கு மிகவும் சிறந்த உணவாக உள்ளது.. நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த சுரைக்காய் மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. இந்த ஜூஸுக்கு, சிறிது புதினா இலைகளுடன் சுரைக்காய், சிறிது இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் என அனைத்தையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இறுதியில், 2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்தால், ஜீரண சக்தி பெருகும்.. பித்தத்தைப் போக்கும். சுரைக்காய் விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மையை இழந்தவர்கள் மீண்டும் பெறுவார்கள்.
விதைகள்: இந்த விதைகளை வெயிலில் காயவைத்து, தோலை நீக்கி, அதிலுள்ள பருப்பை மட்டும் வெளியே எடுத்து வறுத்து பொடி செய்து சாப்பிடுவார்கள். வைட்டமின் B, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து என பல சத்துக்கள் இந்த விதையில் உள்ளன. சிறுநீரை அதிகப்படுத்தி, சிறுநீரகப் பாதை நோய்தொற்றை தடுப்பதில், இந்த விதை பெரும்பங்கு வகிக்கிறது. அத்துடன், பித்தத்தையும் நீக்குகிறது.












Click it and Unblock the Notifications