கொத்து கொத்தாக.. கொட்டும் முடிக்கு வல்லாரை.. ஈஸியான வெயிட் லாஸுக்கு வல்லாரைக்கீரை கஞ்சி.. ஆச்சரியம்
சென்னை: மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் வல்லாரை கீரை, காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடியது. இதற்கு உதவக்கூடிய வல்லாரை மாத்திரைகளை நாமே வீட்டில் தயாரிக்கலாம். எப்படி தெரியுமா?
அனீமியா உள்ளவர்களுக்கு இந்த கீரையை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.. சருமத்துக்கு ஆரோக்கியத்தையும், பொலிவையும் தரக்கூடியது.. உடலில் நமைச்சல், எரிச்சல், புண்கள் போன்றவைகளை குணப்படுத்தக்கூடியது இந்த கீரை..

மன அழுத்தத்தை தடுத்தும் இந்த வல்லாரைக் கீரை, நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.. வல்லாரை கீரையை கழுவி சுத்தம் செய்து, நீர்விட்டு அரைத்து ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வந்தால் மாரடைப்பு நம்மை நெருங்காது.
வல்லாரைக்கீரை: நினைவாற்றலை பெருக்கக்கூடிய சக்தி மட்டுமல்லாமல், மனித மூளை நன்றாக செயல்பட உதவும் சத்துக்கள், இந்த வல்லாரைக்கீரையில் உள்ளது.. அதனால்தான் குழந்தைகளுக்கு இந்த கீரையை கட்டாயம் சாப்பிட தர வேண்டும் என்பார்கள். ஆனால், இது லேசான கசப்பு தன்மை உடையது என்பதால், வல்லாரையை பொடி போல தயாரித்து தரலாம்.
இந்த வல்லாரை இலைகளை நிழலில் காயவைத்து, பவுடராக அரைத்து, சலித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.. 1 முதல் 2 கிராம் அளவுக்கு எடுத்து, தினமும், காலை, மாலை என 2 வேளையும், ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிக்க தரலாம்.. அல்லது வெறுமனே 2 வல்லாரை இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தரலாம். இதனால் குழந்தைகளின் திறன், நினைவாற்றல், சுறுசுறுப்பு தன்மை பெருகிவிடும்.
பற்பொடி: பற்கள் சம்பந்தமான நோய்களை தீர்க்கவும், இந்த வல்லாரையை பொடி போல தயாரித்து பயன்படுத்தலாம்.. இந்த பொடியில் பல் தேய்த்து வந்தால், ஈறுகளுக்கு வலு கிடைப்பதுடன், பற்களின் கறைகள் நீங்கும்....
அதேபோல, இந்த கீரையுடன் மிளகு, துளசி இலை போன்றவற்றை சம அளவு எடுத்து, விழுதுபோல அரைத்து, மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயங்களில், இந்த மாத்திரையை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்..
சத்தான கஞ்சி: உடல் எடையை குறைய வேண்டுமானால், இந்த கீரையை, புழுங்கல் அரிசியுடன் சேர்த்து கஞ்சி போல செய்து குடிக்கலாம்.. அதாவது, புழுங்கல் அரிசியை கொரகொரப்பாக அரைத்து கழுவி கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், சீரகம், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில், எண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து, சுத்தம் செய்து வைத்திருக்கும் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கி, குக்கரிலுள்ள கஞ்சியில் கொட்டி கலந்துவிட வேண்டும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications