கத்தை கத்தையா கொட்டுதா தலைமுடி.. ஆரஞ்சு விதை இருக்கா? அப்ப இந்த எண்ணெய் ட்ரை பண்ணுங்க.. செம ரிசல்ட்
சென்னை: தலைமுடி வளர்வதிலும், வறட்சியை நீக்குவதிலும், எண்ணெய்க்கு மிகப்பெரிய பங்கு உள்ளன. அந்தவகையில், 2 வகையான எண்ணெய்களை பார்பபோம்.
பெரும்பாலும் பழங்களின் விதைகளில் ஊட்டச்சத்து பல நிறைந்திருக்கின்றன.. இது ஆரோக்கியத்தை அதிகரிக்க தூண்டுகோலாகிறது.. விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, அல்சைமர் எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகளும் உள்ளன.

விதைகள்: வைட்டமின் A, E, சரியாக உறிஞ்சுவதுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கிறது. அந்தவகையில், ஆரஞ்சு பழம் மற்றும் முருங்கை விதைகளை சொல்லலாம்..
ஆரஞ்சு விதைகளில் பழத்தைவிட அதிக நன்மை இருக்கின்றன.. சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இந்த விதைகள் திகழ்கின்றன.. உடலிலுள்ள கழிவுகளை நீக்க இந்த விதைகள் உதவுகின்றன. ஆரஞ்சு விதைகளில் வைட்டமின்C, B6, மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் , நார்ச்சத்து உள்ள இந்த விதைகளிலிருந்து ஸ்பெஷல் எண்ணெய்கள் தயார் செய்யப்படுகின்றன.
எண்ணெய்: இந்த எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு தூண்டுகோலாகின்றன. காரணம், இந்த விதைகளிலிருக்கும், பயோஃப்ளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.. இதை தலையில் தேய்க்கும்போது, ரத்த ஓட்டம் சீராகின்றன, தலைமுடியும் வலுவாகின்றன.
அதேபோல, ஆரஞ்சு விதைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், சிறந்த கண்டிஷனராக செயல்படும்.. இந்த விதைகளை காயவைத்து தூளாக்கி வைத்து, தலைக்கு ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
சத்துக்கள்: முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற சத்துக்கள் உள்ளன. 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் உள்ளதால், எண்ணெய் தயாரிக்க முடிகிறது. இந்த எண்ணெய்யில் புரோட்டீன், நிறைவுற்ற கொழுப்பு போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
கீரையை சாப்பிட்டால் தலைமுடிக்கு எவ்வளவு ஆரோக்கியமோ, அந்த அளவுக்கு கூந்தல் அடர்த்தியை, இந்த முருங்கை எண்ணெய்யும் தருகிறது.. வேர்க்கால்களில் இதை பூசி வரும்போது, தலைமுடிகள் பலப்படும்.. சரும வறட்சியும் நீங்கும். இந்த எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தாலும், பலன் தரும். அல்லது முருங்கை எண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய்யும் சேர்த்து தேய்த்தால் கூடுதல் சிறப்பு.
எப்படி தயார் செய்வது: முருங்கை விதைகளை வாணலியில் கொட்டி வறுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வறுத்த விதைகளை அந்த நீரில் போட்டு மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
அப்போது, விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்.. அடுப்பை குறைத்து வைத்துக் கொண்டு, அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து பார்த்தால், எண்ணெய் மட்டுமே தங்கியிருக்கும். ஆனால், இதனுடன் பாதாம் எண்ணெய்யும் கலந்து பயன்படுத்த வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications