அரிசி வாங்க போறீங்களா? பிளாஸ்டிக் அரிசி கலப்படத்தை கண்டறிவது எப்படி? 2 வழிகளில் கண்டுபிடிக்கலாம்!
சென்னை: உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எப்படி எளிதாக கண்டறிவது என்பதை பார்க்கலாம். கண்டறிந்து புறக்கணிப்பதன் மூலம் உடல்நலத்தை பாதுகாப்போம்.
அந்த காலத்தில் 80 வயது, 90 வயது ஆனாலும் பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் மூட்டை தூக்கும் அளவுக்கும் தண்ணீர் குடத்தை இடுப்பில் தூக்கும் அளவுக்கும், வயல்களில் ஒற்றை ஆளாக இறங்கி வேலை செய்யும் அளவுக்கும் இருந்தார்கள்.

ஒரு கல்யாணத்துக்கே ஆனாலும் தடபுடலாக சமைத்து வந்தார்கள். இதற்கு காரணம் இவர்கள் எடுத்துக் கொண்ட உணவு முறைதான். ராகி, கம்பு, சோளம், சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறு வகைகளை எடுத்துக் கொண்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் இவர்கள் சாப்பிட்ட பழம், காய்கறிகள், அரிசி, கீரைகள் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு விளைவிக்கப்பட்டன. இவை சீக்கிரம் காய்க்க வைக்க வேண்டும் என எந்த மருந்தையும் விவசாயிகள் போடவில்லை. ஆனால் இன்று நாம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை விட்டுவிட்டோம்.
அத்துடன் உடனே காய்த்து, உடனே பழுத்து, உடனே சாப்பிடும் ஹைபிரிட் முறைக்கு மாறிவிட்டோம். இதனால் சிறு குழந்தைகளுக்குகூட சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு, இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. எனவே உணவு பொருட்களை ஆரோக்கியமானதாக உண்ண வேண்டும்.
நிறைய கலப்படங்கள் வந்துவிட்டன. தற்போது அரிசியில் கூட பிளாஸ்டிக் அரிசியை சேர்த்து விற்பனை செய்து வருகிறார்கள். இது பார்ப்பதற்கு நல்ல அரிசி மாதிரியே இருந்தாலும் இவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.
ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அரிசியை போட வேண்டும், அதன் பிறகு அரிசி மேல் மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என அர்த்தம். அடியிலேயே தங்கிவிட்டால் நல்ல அரிசி ஆகும். அது போல் வத்திக்குச்சி, அல்லது லைட்டரை கொண்டு சில அரிசிகளை எரிக்க வேண்டும். அரிசி எரிந்ததும் பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது போலியான அரிசி ஆகும். உண்மையான அரிசி எரிந்தால் பிளாஸ்டிக் வாசனை வராது. இப்படி கலப்படங்களை கண்டறிந்து அதிலிருந்து உங்கள் உடலை பாதுகாத்து கொள்ளுங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications