பைசா செலவில்லாமல் மாவு சத்தை குறைப்பது எப்படி? இதோ சூப்பரான ஷெட்யூலை பாருங்க
சென்னை: மாவுச்சத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா ஒரு ஷெட்யூலை போட்டுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது : எகனாமிக்கா ரொம்ப காசு செலவு இல்லாம நானும் மாவுச்சத்த குறைச்சு சாப்டணும்னு விரும்புறேன் என்ன பண்ணனும்??? காலைல எழுந்து குடிக்கிற டீ / காபிய நிறுத்த முடியுமானு பாருங்க, முடியலையா லெமன் டீ/ கடுங்காப்பி / வரட்டீனு இனிப்பு இல்லாம குடிங்க

அதுவும் முடியலையா 100 மில்லி பால் டீ காபில எந்த வகைலையும் இனிப்பு சேர்க்காதீங்க ( சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம்/ கருப்பட்டி / தேன் / ஸ்டீவியா / சுகர் ஃப்ரீ ) எதையும் சேர்க்காதீங்க காலை சாப்பாடா நாலு இட்லி அல்லது மூணு தோசை இதை நிறுத்திட்டு
நூறு கிராம் அவிச்ச அல்லது வறுத்த நிலக்கடலை சாப்பிடுங்க.
வறுக்குறது மணல்ல வறுங்க அவிச்சு சாப்புடறது ரெகமெண்டட். இதன் மூலமா காலைல சாப்புடற 50-100 கிராம் மாவுச்சத்து உள்ள போகாம அதை 20 கிராமுக்கும் கம்மியா குறைச்சுட்டோம். கூடவே சத்தான புரதமும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் கிடைக்குது. புரதமும் கொழுப்பும் மனசையும் வயிறையும் சேர்த்தே நிரப்பும் என்பதால் திருப்தி ஏற்பட்டு மீண்டும் மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு பசி எடுக்காது.
மீறி பசி எடுத்தால் இருக்கவே இருக்கு லோ கார்ப் நண்பன் - வெள்ளரிக்காய் ரொம்ப பெருசும் இல்லாம சிறுசும் இல்லாம ரொம்ப எளசும் இல்லாம முத்தலும் இல்லாம ஒரு வெள்ளரிப்பிஞ்ச சாப்டுங்க கூட ஒரு லெமன் டீ இனிப்பில்லாம அடிங்க.... மதிய சாப்பாடு நேரத்துல இப்ப சாப்புடுற சோத்தோட அளவ மூன்று பங்கா போட்டுக்குங்க.
அதுல ஒரு பங்க சாப்டுங்க சாப்டாம விட்ட மிச்ச இரண்டு பங்குல ஒரு பங்கு அளவு காய்கறிகளை சாப்டுங்க இன்னொரு பங்கு அளவுக்கு ஈடாக ரெண்டு முட்டைகளை உங்களுக்கு புடிச்ச மாதிரி ஆம்லெட் / ஆஃப் பாயில் / டபுள் சைடு / அவிச்சது/ பொடி மாஸ்னு எப்டி வேணாலும் சாப்டுங்க இப்ப மதியம் உள்ள போக இருந்த மாவுச்சத்து அளவுகள்ல பெரும்பகுதிய குறைச்சுட்டீங்க.
கூடவே காய்கறிகள் மூலம் நார்ச்சத்தும் முட்டைகள் வழி புரதமும் வைட்டமின்களும் நல்ல கொழுப்பும் கிடைக்கிறது. சமைப்பதற்கு தேங்காய் எண்ணெய் நெய் போன்றவற்றை உபயோகிப்பது சிறந்தது. அளவுடன் உபயோகியுங்கள் வரம்பு மீறாதீர்கள். அடுத்து மாலை நேரம் 100 மில்லி பால் டீ இனிப்பு ஏதும் இல்லாமல் பருகுங்கள். கூடவே கொய்யா காயைப் பறித்து பல்லுக்கு பங்கம் வராமல் உண்ணுங்கள்.
இரவு உணவு நான்கு தோசைகள் உண்ணும் இடத்தில் அதை இரண்டாகக் குறைத்து விட்டு அதற்கு ஈடாக பச்சை பட்டானி / காளிபிளவர் / காளான் / கோழி / மீன்/ பனீர் போன்றவற்றை நூறு கிராம் சேர்த்துக் கொள்ளலாம். எதுவும் இல்லையா? இரண்டு தோசைகளுடன் ஒரு டபுள் ஆம்லெட் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும்.
எட்டு மணிக்குள் இரவு உணவை முடிக்க முயற்சி செய்யுங்கள். காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை இருக்கும் பல மணிநேரங்களில் ஏதேனும் ஒரு மணிநேரத்தை தொடர்ந்து நடைபயிற்சிக்கு செலவிடுங்கள். காலை வெறும் வயிற்றிலும் நடக்கலாம்.
இரவு உணவுக்குப் பிறகும் நடக்கலாம்.
உறக்கம் - குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணிநேரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கும் மனதுக்கும் அதிக அழுத்தம் தரும் பணிகள் என்றால் எட்டு மணிநேர உறக்கம் அவசியம் தண்ணீர் - மூன்று லிட்டர் முதல் நான்கு லிட்டர் பருகவும் காலை உணவை டீ/ காபி உட்பட எட்டு மணிக்கு மேல் சாப்பிட்டு இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்து விடுங்கள்.
காலை உணவை லேட்டாக்குவதும் இரவு உணவில் விரைவு காட்டுவதும் நல்ல யுக்தி. மாவுச்சத்தைக் குறைத்து புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தை உண்பது என்பது அனைவராலும் முடிந்த ஒன்று மனமிருந்தால் மார்க்க பந்து. சாரி... மார்க்கமுண்டு... இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications