கிட்னியில் கற்களை கரைக்க இது ஒன்னு மட்டுமே போதும்.. ஆச்சரியமூட்டும் "ஒருநாள் சாறு".. இதென்ன புதுஸ்ஸா?
சென்னை: சிறுநீரக கற்கள் தோன்றிவிட்டால், உயிரையே கொல்லும் அளவுக்கு வலி எடுத்துவிடும்.. கிட்னியில் கற்கள் பெரிதாக இருந்தால், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.. ஆனால், ஆரம்ப நிலையில் இருந்தால், இந்த கற்களை எளிய முறையில், உணவு முறையிலேயே குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள்.
உணவு பழக்கத்தை சரியாக கடைபிடித்தால், கற்கள் வராமல் தடுக்கலாம்.. அத்துடன், ஆரம்பகட்ட சிறுநீரகக் கற்களையும் இதே உணவு பழக்கத்தால் கரைத்துவிடலாம்.

என்னென்ன செய்யலாம்: சிறுநீரகக் கற்கள் இருந்தால் முதலில் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.. இதனால், நச்சுக்கள் நீக்கப்படும், கற்களும் எளிதாக வெளியேற துணைபுரியும்.. அடுத்ததாக, பார்லி தண்ணீரை நிறைய குடிக்கலாம்.. பார்லியை நன்றாக வேகவைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், அதிக சிறுநீர் வெளியேறும்.. அப்போது சிறுநீரகத்தில் உப்பு சேர்வதும் தடுக்கப்படும்..
துளசியில் ஜூஸ் செய்து, அதில தேன் கலந்து குடிக்கலாம்.. எலுமிச்சை ஜூஸ், உப்பு சேர்க்காமல் குடிக்கலாம்.. தக்காளி ஜூஸ் செய்து, மிளகுதூள் சேர்த்து குடித்து வரலாம்.. எலுமிச்சம், தேன், பார்லி இவை எல்லாமே நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றக்கூடியது.. அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, சிறு சிறு கற்கள் கரைவதுடன், மீண்டும் கற்கள் உருவாவதும் தடுக்கப்படும்.
வெள்ளரிக்காய்கள்: நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.. இதில் முதன்மையானது வெள்ளரிக்காய்கள்.. உடலிலுள்ள நீர்ச்சத்தை சமன்செய்வதுடன், சிறுநீரக கற்களையும் வெளியேற்ற இந்த வெள்ளரிகள் உதவுகின்றன. அதேபோல, பழங்களில் மாதுளம், திராட்சை பழங்களை ஜூஸ் போல அல்லாமல், விதைகளுடன் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.. இதனால் சிறுநீரக கற்கள் உருவாவதை தவிர்க்கலாம்.
வாழைத்தண்டு: மாதுளையில் உள்ள காரத்தன்மை கற்கள் உருவாவதை தடுக்கிறது.. சமையலில், பரங்கிக்காய், சுரைக்காய், என நீர்நிறைந்த காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. இதில் முக்கியமானது, வாழைத்தண்டு.. இந்த வாழைத்தண்டினை பொரியல் அல்லது ஜூஸ் போல செய்து சாப்பிடலாம்..
அடுத்ததாக முள்ளங்கியை சேர்த்து கொள்ளலாம்.. இதை தினமும் சமையலுக்கு பயன்படுத்த முடியாவிட்டாலும், ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. இவைகள் எல்லாம் சிறுநீர் பெருக்கி என்பதால், தினம் ஒரு காய்களை சாப்பிட வேண்டும்.
அகத்திக்கீரைகள்: கீரைகளில், அகத்திக்கீரையும், புதினாவும், துளசியும் சிறுநீரக கற்களை கரைக்க பெரிதும் துணைபுரிகின்றன.. அகத்திக்கீரையை கடையல், பொரியல் செய்யலாம்.. புதினாவை சட்னி, துவையல் மட்டுமின்றி ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம். துளசியை வெறுமென வாயில் போட்டு மென்று விழுங்கலாம். அதேபோல, ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குடித்தால், சிறுநீரக கற்கள் கரைய நிவாரணம் கிடைக்கும்.
வாழை தண்டு சாறினைவிட, வாழை மர சாறு குடித்தால் இன்னும் சிறப்பு கிடைக்கும்.. அதாவது, வாழை மரத்தை வெட்டிய பிறகு அடிமரத்தை சிறிது பள்ளமாக்கிவிட்டு, அந்த இடத்தை ஒரு துணியால் மூடவேண்டும்.. 8 மணி நேரம் கழித்து துணியை விலக்கி பார்த்தால், வெட்டிவைக்கப்பட்ட பள்ளத்தில் சாறு போல சிறிது வடிந்திருக்கும்... இந்த சாறினை குடித்தாலே போதுமாம்.. சிறுநீரக கற்கள் கரைந்துவிடும் என்கிறார்கள். இப்படி ஒரு நாள் மட்டுமே இந்த சாறுக்கு மவுசு அதிகம்.. பவரும் அதிகம.
தவிர்க்கலாம்: இதைத்தவிர, உப்பு, சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, கூல்டிரிங்ஸ்கள், சாக்லேட், ஆல்கஹால் இவைகளை தவிர்த்தாலே போதும், எப்போதுமே சிறுநீரகத்தில் கற்கள் சேராது..
கல்லின் அளவு 5 மிமீக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு மருத்துவம் பயன்படுமே தவிர, இதுவே தீர்வுகிடையாது. கற்களின் அளவு பெரிதானால், டாக்டரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications